ஓசூரில் ராஜஸ்தான் பெண்களுக்கு போலீஸ் ஏட்டு பாலியல் கொடுமை: ஆவணங்களை கேட்டது ஐகோர்ட்டு!!

Read Time:4 Minute, 25 Second

d7106692-fb4a-438a-a791-1bf9c4a5cd1c_S_secvpfசென்னை ஐகோர்ட்டில், அகில இந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் தேசிய தலைவர் உ.வாசுகி, தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில் கூறி இருப்பதாவது:–

கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கடந்த அக்டோபர் 8–ந் தேதி ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 4 பெண்கள் 2 குழந்தைகளுடன் ஓசூர் பஸ் நிலையத்தில் காத்திருந்தனர். அப்போது, ஓசூர் போலீஸ் நிலைய ஏட்டு ஒருவர், குழந்தைகளுடன் பயணம் செய்த 4 பெண்களை போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு அழைத்து சென்றுள்ளார். அங்கு அந்த பெண்களிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டார். பின்னர், அந்த பெண்களை பாலியல் கொடுமையும் செய்துள்ளார்.

இந்த சம்பவம் பத்திரிகைகளில் செய்தியாக வெளியானது. இதையடுத்து, எங்கள் அமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் சம்பவ இடங்களில் விசாரணை நடத்திய போது, பாதிக்கப்பட்ட பெண்கள் மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு, விடுவிக்கப்பட்டு விட்டதாகவும், பாலியல் கொடுமை செய்த போலீகாரர் மீது வழக்கு எதுவும் பதிவு செய்யவில்லை என்றும் தெரியவந்தது.

தற்போது, பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கு உள்ளனர் என்றே தெரியவில்லை. எனவே, இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யவும், அந்த வழக்கை சி.பி.சி.ஐ.டி. விசாரணைக்கு மாற்றவும் உத்தரவிட வேண்டும். இந்த வழக்கு விசாரணையை தமிழ்நாடு மாநில குழந்தைகள் உரிமை பாதுகாக்கப்பு ஆணையம் கண்காணிக்கவும், பாதிக்கப்பட்ட இளம் பெண் உட்பட 5 பெண்களுக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த மனு தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன் கவுல், நீதிபதி எம்.சத்தியநாராயணன் ஆகியோர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மனுதாரர் சார்பில் வக்கீல் உ.நிர்மலாராணி ஆஜராகி, ‘பாதிக்கப்பட்ட பெண்கள் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக்கூடியவர்கள். அவர்களை போலீஸ்காரர் ஒருவர் பிடித்துச் சென்று, இந்த கோர்ட்டில் சொல்ல முடியாத அளவில் பாலியல் கொடுமை செய்துள்ளார். இப்போது பாதிக்கப்பட்ட பெண்கள் எங்கு உள்ளனர் என்றே தெரியவில்லை’ என்று வாதிட்டார்.

இதற்கு பதிலளித்து அரசு தரப்பில் அரசு பிளீடர் எஸ்.டி.எஸ்.மூர்த்தி, போலீஸ்காரர் மீதான குற்றச்சாட்டு என்பதால், இதுகுறித்து போலீசார் விசாரிக்கவில்லை. இந்த சம்பவம் குறித்து போலீஸ் சூப்பிரண்டு செய்த பரிந்துரையின் அடிப்படையில், சப்கலெக்டர் விசாரணைக்கு மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டார். இதன்படி சப்கலெக்டர் விசாரணை நடத்தி, அறிக்கையை கலெக்டரிடம் தாக்கல் செய்துள்ளார்’ என்று வாதிட்டார்.

இதையடுத்து நீதிபதிகள், ‘இந்த வழக்கை வருகிற 22ந் தேதிக்கு தள்ளிவைக்கிறோம். அதற்குள், கிருஷ்ணகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நடந்த சம்பவம் குறித்த அறிக்கை, மருத்துவ அறிக்கை, போலீஸ்காரர் மீது எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை உள்ளிட்ட அனைத்து ஆவணங்களுடன் விரிவான பதில் மனுவை தாக்கல் செய்யவேண்டும்’ என்று உத்தரவிட்டார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளி மாணவியை கொன்றவர்களுக்கு கடும் தண்டனை விதிக்க வேண்டும்: தாய் கண்ணீர் பேட்டி!!
Next post 22 வயது பெண்ணை மணந்த 17 வயது வாலிபர்: ஓமலூர் போலீசில் தஞ்சம்!!