பொதுபல சேனா இன்று அறிவிக்கும்: ஹெல உறுமய, ஸ்ரீமுகா, ததேகூ இன்னும் முடிவில்லை!!

Read Time:1 Minute, 55 Second

1523989962poduஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பது என்று இன்று அறிவிக்கப்படும் என பொது பல சேனா அமைப்பு தெரிவித்துள்ளது.

இதேவேளை, ஜாதிக ஹெல உறுமய எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக தயாரித்துள்ள யோசனைகள் தொடர்பில் மக்களை தெளிவுபடுத்தும் தேசிய சந்திப்பு இன்று மாலை கொழும்பில் இடம்பெறவுள்ளது.

நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையின் அதிஉச்ச அதிகாரங்களை நீக்குதல், நல்லாட்சிக்கான சுயாதீன ஆணைக்குழு அமைத்தல், மக்களுக்கு பொறுப்புக்கூறும் தேர்தல் முறை ஒன்றை ஏற்படுத்தல் போன்ற முக்கிய யோசனைகள் அதில் அங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு என்று இன்று அறிவிக்கப்பட மாட்டாதென ஜாதிக ஹெல உறுமய குறிப்பிபட்டுள்ளது.

எதிர்வரும் சில தினங்களில் இது குறித்த அறிவிப்பு விடுக்கப்படும் என ஜாதிக ஹெல உறுமயவின் ஊடகப் பேச்சாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் ஜனாதிபதித் தேர்தலில் யாருக்கு ஆதரவு கொடுப்பது என்று இன்னும் முடிவெடுக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இடதுசாரி கட்சிகள் சார்பில் போட்டியிடும் பொது வேட்பாளர் யார்?
Next post தலையில் பந்து தாக்கிய ஆஸி. வீரர் பிலிப் ஹியுஸ் உயிரிழப்பு!!