யாழில் உள்ளுர் உற்பத்தி ஐஸ்கிறீம் மீதான தடையின் பின்னனியில், “உதயன் பத்திரிகை” சரவணபவன்?!! -யாழ் சமூகப் பிராணி!!
தமிழ்த் தேசியத்தை வைத்து உழைத்த சரவணபவன் ஐஸ்கிறீமை வைத்து உழைக்கின்றார். தமிழ்த்தேசியத்தை வைத்து உதயன் பத்திரிகையை வைத்து எவ்வாறு சரவணபவன் உழைத்தாரோ அதே பாணியில் தற்போது ஐஸ்கிறீம் முகவராக மாறி உழைக்கத் தொடங்கியுள்ளார்.
குடாநாட்டில் உற்பத்தி செய்யப்படுகின்ற ஐஸ்கிறீம் வகைகளில் மலத் தொற்று என பத்திரிகையில் எழுதச் செய்து அந்த ஐஸ்கிறீம் வகைகளின் மதிப்பை இறங்கச் செய்து தற்போது தான் முகவராக மாறியுள்ள எலிபன் ஐஸ்கிறீம் கம்பனியில் உற்பத்தி செய்யும் ஐஸ்கிறீம் வகைகளை யாழ்ப்பாணத்தில் விற்பனை செய்வதற்காக பலருடன் சோ்நது பெரும் சதித் திட்டத்தை உதயன் முதலாளி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில வாரங்களுக்கு முன் தொடா்ச்சியாக உதயன் பத்திரிகையில் ஐஸ்கிறீமி்ல் மலத் தொற்று என செய்திகள் வந்தன. இந்தச் செய்திகளுக்கான மூலம் எங்கிருந்து வந்தது என எவருக்கும் தெரியவில்லை.
வடமாகாண சுகாதார அமைச்சு அதிகாரிகள் கூட முதலில் இது தொடா்பாக உதயனுக்கு தகவல் கொடுக்கவில்லை என அமைச்சு வட்டாரங்கள் தெரிவிக்கின்ற. உதயன் பத்திரிகையின் முதலாளி எலிபன் ஐஸ்கிறீம் முகவராக மாறிய பின் இந்தச் செய்தி வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
உதயன் பத்திரிகையில் செய்தி வெளியிட்டவுடன் வடக்கு மாகாண சுகாதார அமைச்சா் சத்தியலிங்கம், மற்றும் வடக்கு மாகாண சுகாதாரப் பணிப்பாளா் ஆகியோர் ஒரு குழுவை அதிரடியாக அமைத்து ஐஸ்கிறீம் நிலையங்களில் சோதனை நடாத்தியுள்ளார்கள்.
இது தொடா்பாக பொதுமக்களின் ஐயங்கள் இங்கு கேள்விகளாகத் தரப்பட்டுள்ளன. சரியான முறையில் நடப்பவா்களாகக் காட்டிக் கொள்பவா்கள் இந்தக் கேள்விகளுக்கு பதிலளிப்பார்களா?
யாழ்ப்பாணத்தில் உள்ள நிலத்தடி நீ்ரில் ஏற்கனவே மலத்தில் உள்ள பற்றீரியா கிருமி இருப்பதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவ்வாறான நீரையே யாழ்ப்பாண மக்கள் குடிக்கின்றார்கள். அந்த நீரில் தயாரிக்கப்படும் ஐஸ்கிறீமிர் மலத்தில் இருக்க கூடிய பக்றீரியாக்கள் இருந்திருக்கலாம். ஆனால் தனியவே ஐஸ்கிறீம் கடைகளில் மாத்திரம் சோதனை நடாத்துவது ஏன்?
யாழ்ப்பாணத்தில் உள்ள உணவகங்கள் மழைநீரிலா உணவுகளைத் தயாரிக்கின்றன.? அல்லது மக்கள் மழை நீரையா குடிக்கின்றார்கள். ?
யாழ் மாநகரசபை, மற்றும் பிரதேசசபைகளில் எத்தனை கொத்துறொட்டிக் கடைகளில் பழுதடைந்த மாமிசங்கள், மீன்களை வைத்து உணவு தயாரிக்கின்றார்கள். மாவினை கையினான் பிசையும் போது அந்தக் கை முதலில் மலசல கூடத்தில் இருந்தது என்பது பற்றி யாருக்குத் தெரிந்திருக்கும். ?
இவ்வாறான நிலையில் சுகாதரா அதிகாரிகள் ஐஸ்கிறீம் மாதிரிகளை மாத்திரம் சோதனை செய்தது ஏன்?
சுகாதார அமைச்சா் சத்தியலிங்கம் , மற்றும் சுகாதாரப் பணிப்பாளா், அதிகாரிகள் எவ்வளவு லஞ்சத்தை வாங்கி இவ்வாறான வேலைகளில் ஈடுபட்டுள்ளார்கள்?
சுன்னாகம் பகுதியில் நொதேன் பவா் மின்சார நிலையத்தால் நிலத்திற்குள் செலுத்தப்படும் கழிவு நீா் அப்பகுதி கிணறு எங்கிலும் பரவியுள்ளது. இதைப்பற்றி அக்கறை எடுக்காத சத்தியலிங்கம் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஏன் ஐஸ்கிறீமுக்குள் மூக்கை நுழைத்தார்கள்?
உ தயன் பத்திரிகை முதலாளி தமிழ்த் தேசியத்தை வைத்து எனி உழைக்க முடியாது எனத் தெரிந்து ஐஸ்கிறீம் வியாபாரத்தில் இறங்கிவிட்டாரா?
உண்மையில் தயாரிக்கப்படும் உணவுவகைகள் எல்லாம் சுத்தமான முறையில் தயாரிக்கப்படுவது அவசியம். அது மக்களின் சுகாதார நலனுக்கு முக்கியமான விடயம். ஐஸ்கிறீம் என்பது தினமும் சாப்பிடும் ஒரு உணவு அல்ல. மாதத்திற்கு ஒரு முறை அல்லது சில முறை சாப்பிடும் இந்த ஐஸ்கிறீமுக்காக ஏன் இவ்வளவு அக்கறை?
பொதுவாக நாம் ஒவ்வொருவரும் தினமும் மலங்கழிப்பது வழமை. எம்மில் எத்தனை போ் மலங்கழித்த பின் எமது இடக்கைகளைக் கழுவுகின்றார்கள்? அத்துடன் எத்தனை போ் நகங்களை எல்லாம் வெட்டுகின்றார்கள். ?
இவ்வாறு பார்தால் ஒரு சாப்பாட்டுக் கடையில் தோசைக்கு மா அரைப்பவா் மலசல கூடத்திற்கு சென்று விட்டு கை கழுவிய பின்னா் அரைப்பார் என்பது எத்தனை வீதம் உறுதி. ?
கொத்துறொட்டிக்கு மா பிசைபவா் அந்தக் கையை தனது எந்தப் பகுதிக்குள் வைத்துவிட்டு கையைக் கழுவிய பின் பிசைவார் என்பது எத்தனை வீதம் உறுதி? இவற்றை எல்லாம் சுகாதாரப் பரிசோதகா்கள் கவனிக்காது ஏன் இந்த ஐஸ்கிறீமில் கண்களை வைத்தார்கள்ஃ?
உதயன் சரவணபவனிடம் எத்தனை கோடிகள் இதற்காக கை லஞ்சமாகப் பெறப்பட்டுள்ளன?
தமிழ்த் தேசியம் பேசிப் பேசி வடக்கு மக்களை முள்ளி வாய்க்கால் வரை கொண்டு சென்ற பெருமை உதயன் பத்திரிகையைச் சாரும். அதே போல் வடபகுதியில் சிறு வியாபாரங்களில் ஈடுபடுபவா்களை உதயன் முதலாளி தற்கொலை செய்ய துாண்டமுற்படுகின்றாரா?
இவ்வாறன ஊடகப் பிழைப்பு நடாத்துவதிலும் பார்க்க தங்கள் சொந்தங்களை மற்றவா்களுடன் கூட்டிக் கொடுத்து பிழைப்பு நடாத்தலாம்.
–யாழ் சமூகப் பிராணி (நன்றி..இலக்கியா)
Average Rating