சிறையில் இருந்தவருக்கு 51 தூக்க மாத்திரை கிடைத்தது எப்படி?

Read Time:1 Minute, 55 Second

1472897957gunalgoshபலத்த பாதுகாப்பு மிகுந்த கொல்கத்தா மத்திய சிறையில் குனால்கோஷ் எம்.பி. தனிமை அறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் அதிர்ச்சி அடைந்த மத்திய சிறைத் துறை அதிகாரிகள் குனால்கோஷ் எம்.பி.க்கு 51 தூக்க மாத்திரைகள் எப்படி கிடைத்தது என்று அதிர்ச்சி அடைந்தனர்.

இதுபற்றி அவர்கள் உடனே விசாரணையை தொடங்கினார்கள். குனால்கோஷ் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது குனால்கோஷ் எம்.பி. ஒரு கடிதம் எழுதி வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த கடிதத்தில் குனால்கோஷ், சாரதா நிதி நிறுவன மோசடியில் ஆதாயம் அடைந்த பலரும் வெளியில் உள்ளனர். எனவே நான் தற்கொலை செய்கிறேன் என்று எழுதியுள்ளார். அதோடு 51 துக்கு மாத்திரைகளை தின்றுள்ளதாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதையடுத்து பொலிசார் நடத்திய விசாரணையில் தினமும் குனால்கோஷ் தலா 2 தூக்கு மாத்திரைகளை கேட்டு வாங்கி சேகரித்து வந்துள்ளார். 51 மாத்திரைகள் சேர்ந்ததும் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார் என்பது தெரிய வந்துள்ளது. இது குறித்து விரிவான அறிக்கை தருமாறு மேற்கு வங்க சிறைத் துறையை சி.பி.ஐ. கேட்டுக் கொண்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post முற்போக்கு தமிழ் தேசிய கட்சியினராகிய நாம் வன்மையாக கண்டிக்கின்றோம்!!
Next post 30 வகையான நோய்களை குணப்படுத்தும் சக்தி கொண்ட அருகம்புல்…!!