இளம்பெண்ணை கற்பழித்து செல்போனில் படம் எடுத்து மிரட்டிய வெளிநாட்டு வங்கி அதிகாரி கைது!!
பெங்களூர் மாகடி ரோட்டில் வசித்து வருபவர் பிரவீன் குமார் (வயது 25). வெளிநாட்டு வங்கியில் வேலை பார்த்து வருகிறார். இவர் பி.யூ.சி. படிக்கும் போது ஆசிரியை ஒருவர் வீட்டிற்கு தினமும் டியூசன் படிக்க செல்வது வழக்கம். இவர் படிப்பை முடித்த பிறகும் ஆசிரியை வீட்டிற்கு அடிக்கடி சென்று வருவார். அப்போது ஆசிரியையின் மகள் மஞ்சுவிடம் (பெயர் மாற்றம்) சகஜமாக பேசுவார். இதை யாரும் தவறாக எடுத்து கொள்ளவில்லை.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மஞ்சுவை பிரவீன் தனது பிறந்த நாள் விழாவில் கலந்துகொள்ள அழைத்தார். அதனை ஏற்று மஞ்சு, பிரவீன் வீட்டிற்கு சென்றார். ஆனால் அங்கு பிறந்தநாள் விழாவுக்கான எந்த அறிகுறியும் இல்லை. இதுபற்றி மஞ்சு கேட்டபோது இன்னும் சற்று நேரத்தில் எல்லோரும் வருவார்கள் என்று கூறினார். அப்போது மஞ்சுவுக்கு குடிப்பதற்காக குளிர்பானம் கொடுத்தார். அதனை குடித்த மஞ்சு மயங்கி விழுந்தார். இதனை சாதகமாக்கி கொண்டு பிரவீன், மஞ்சுவை கற்பழித்தார்.
மேலும் அதனை பிரவீன், தனது செல்போனில் படம்பிடித்து உள்ளார். மயக்கம் தெளிந்த மஞ்சு தனக்கு நேர்ந்த கொடுமை பற்றி கண்ணீர்விட்டு அழுதார். ஆனால் தனது பெற்றோருக்கு பயந்து இதுபற்றி வீட்டில் தகவல் எதுவும் தெரிவிக்கவில்லை.
இந்த நிலையில் பிரவீன் மஞ்சுவிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கூறி இருக்கிறார். ஆனால் பிரவீனை திருமணம் செய்ய மஞ்சு மறுத்து விட்டார். உடனே பிரவீன் தான் ஏற்கனவே செல்போனில் படம் பிடித்து வைத்து இருந்த அந்த ஆபாச வீடியோ காட்சியை மஞ்சுவிடம் காண்பித்து தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று வற்புறுத்தினார். மேலும் கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
ஆனால் மஞ்சு, பிரவீனை திருமணம் செய்ய உறுதியாக மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த பிரவீன், தனது செல்போனில் மஞ்சுவை ஆபாசமாக படம் பிடித்து வைத்து இருந்ததை சி.டி.யில் பதிவு செய்து அதனை மஞ்சுவின் தாயான ஆசிரியைக்கு அனுப்பி வைத்து இருக்கிறார். இதுபற்றி அறிந்த ஆசிரியை அதிர்ச்சி அடைந்தார்.
மகளுக்கு நேர்ந்த கொடுமைபற்றி ஆசிரியை போலீசில் புகார் செய்தார். சைபர் கிரைம் போலீசார் பிரவீனை கைது செய்தனர்.
அவரது செல்போனில் இருந்து ஆபாச வீடியோ காட்சியையும், படங்களையும், போலீசார் பறிமுதல் செய்தனர். இதற்கிடையே பிரவீன் அந்த வீடியோ காட்சிகளை தனது நண்பர்கள் சிலருக்கும் அனுப்பி இருப்பது தெரிய வந்து உள்ளது. அது பற்றியும் போலீசார் விசாரணை நடத்திவருகிறார்கள்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating