குடிநீர் பிடிப்பதில் மோதல்: பெண்கள் குடுமிப்பிடி சண்டை!!

Read Time:1 Minute, 16 Second

Tamil-Daily-News_28906977177திண்டுக்கல் அருகே உள்ள சாணார்பட்டி மரனூத்து தெற்கு தெருவை சேர்ந்தவர் நாகராஜன். இவரது மனைவி முத்துமாரி (வயது 34).

சம்பவத்தன்று அங்குள்ள தெரு குழாயில் முத்துமாரி தண்ணீர் பிடித்து கொண்டு இருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவர் மனைவி நல்லம்மாள் மகள் சண்முகபிரியா ஆகியோர் தண்ணீர் பிடிக்க வந்தனர்.

தண்ணீர் பிடிப்பதில் அவர்களிடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. ஒருவரையொருவர் அவதூறாக பேசினார். மோதல் முற்றவே கைகலப்பானது. ஒருவரையொருவர் முடியை பிடித்து இழுத்து தாக்கினர். அவர்களுக்கு ஆதரவாக குடும்பத்தில் உள்ளவர்களும் சண்டை போட்டனர்.

இதில் முத்துமாரி, சண்முகபிரியா ஆகியோர் காயம் அடைந்தனர். இந்த மோதல் குறித்து இரு தரப்பினரும் சாணார்பட்டி போலீசில் புகார் செய்தனர். போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post உடன்குடியில் முதியவர் மாயம்!!
Next post விருதுநகர் அருகே 2 மாணவிகளின் திருமணம் தடுத்து நிறுத்தம்: அதிகாரிகள் நடவடிக்கை!!