இலங்கை அணி இந்தியாவில் விளையாடக் கூடாது என எதிர்ப்பு!!

Read Time:2 Minute, 20 Second

1316102839Untitled-1தமிழ் இளைஞர்கள், மாணவர்கள் கூட்டமைப்பு மற்றும் மூன்று குழுக்களும் இணைந்து இலங்கை கிரிக்கெட் அணியை இந்தியாவில் அனுமதிக்கக் கூடாது வலியுறுத்தியுள்ளனர்.

அண்மையில் ஐந்து இந்திய மீனவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையிலேயே அவர்கள் இந்த நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெரிகிறது.

இவர்கள் இன்று இது குறித்த மனுவை இந்திய கிரிக்கெட் வாரியத்திடம் கொடுக்கவுள்ளனர்.

நாம் தமிழ்நாடு கிரிக்கெட் சங்க அதிகாரிகளை அணுகி, இந்தப் பிரச்சினை பற்றி விளக்கினோம் என, கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் வீ.பிரபாகரன் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகச் செய்திகள் குறிப்பிடுகின்றன.

இன்று ஐதராபத்தில் இலங்கை – இந்திய அணிகள் மோதும் மூன்றாவது போட்டி நடைபெறவுள்ள நிலையில், மற்றைய போட்டிகள் நிறுத்தப்பட வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்த மேற்கிந்திய தீவுகள் அணி, பாதியிலேயே தொடரை இரத்துச் செய்துவிட்டு நாடு திரும்பியது.

மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் வாரியத்துடன் ஏற்பட்ட சம்பள முரண்பாடு காரணமாகவே அவர்கள் இவ்வாறு வௌியேறினர்.

இதனையடுத்து குறித்த நஸ்டத்தை ஈடுசெய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் இலங்கை கிரிக்கெட் சபைக்கு அழைப்பு விடுத்தது.

அதனை ஏற்ற இலங்கை கிரிக்கெட் அணி, இந்தியாவுக்கு சுற்றுப் பயணம் செய்து ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வீட்டுரிமையை பெற்றுத் தாருங்கள்! மலையகத்தில் அமைதிப் பேரணி!!
Next post மீனவர் பிரச்சினையை சிலர் அரசியலாக்க முயற்சி!!