போதை பழக்கத்தை மறைக்க மனைவி சிறுநீரை மாற்றி கொடுத்த பஸ் டிரைவர்: கர்ப்பம் என கூறிய மருத்துவ அறிக்கை!!

Read Time:1 Minute, 42 Second

b7f414ba-c211-46b5-92aa-c8224b5a3ab9_S_secvpfஎகிப்தில் விபத்துக்கள் நடைபெறுவதை தடுக்க பஸ் டிரைவர்களுக்கு போதை மருந்து பரிசோதனை நடத்தப்பட்டு வருகிறது. அதற்காக அரசு மருத்துவ மனைகளில் பஸ் டிரைவர்கள் பரிசோதனைக்காக சிறுநீர் வழங்க அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி பஸ் டிரைவர்கள் அனைவரும் தங்களது சிறுநீரை பரிசோதனைக்கு வழங்கினர். ஆனால் ஒருவர் மட்டும்தான் போதை பழக்கத்தை மறைக்க தனது மனைவியின் சிறுநீரை மாற்றி கொடுத்து விட்டார்.

இவரது கெட்ட நேரமோ அல்லது துரதிர்ஷ்டமோ தெரியவில்லை. அந்த பஸ் டிரைவரின் மனைவி 2 மாத கர்ப்பமாக இருந்திருக்கிறார். எனவே, அந்த சிறுநீர் பரிசோதனையில் பஸ் டிரைவர் கர்ப்பம் என தெரிய வந்தது.

அதன்படி, பஸ் டிரைவர் கர்ப்பமாக இருப்பதாக அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டது. இதில் என்ன விசேஷம் என்றால் இந்த சிறுநீர் உங்களுடையது தானா என அதிகாரிகள் கேட்க பிரச்சினையில் இருந்து தப்பிக்க அந்த டிரைவர் ஆமாம் என்று தலையாட்டினார்.

உடனே, அந்த அதிகாரி மழுப்பலுடன் கூடிய கிண்டல் சிரிப்புடன் ‘நீங்கள் கர்ப்பம் அடைந்திருப்பதற்கு எனது வாழ்த்துக்கள்’ என கூறி கை குலுக்கி அனுப்பி வைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஆல்கஹால் நோயால் பாதிப்பு: குடிகார தாய் மீது வழக்கு தொடர்ந்த சிறுமி!!
Next post பேய் நடமாடும் திகில் வீடு: ஆய்வாளர் எடுத்த புகைப்படத்தில் பதிவான பெண்ணின் உருவம்!!