இரண்டாவது டேட்டிங்கின் போது, உங்கள் காதலியை ஈர்க்க 10 வழி…!!
இரண்டாவது டேட்டிங்கின்போது உங்கள் காதலி உங்களது இயல்பு குணம், தனிப்பட்ட சொந்த விவரங்கள், மற்றும் உங்கள் எண்ணங்களை பற்றி தெரிந்து கொள்ள எதிர்பார்ப்பார். இரண்டாவது டேட்டிங் மட்டும் வெற்றிகரகமாக முடிந்தால், உங்கள் இருவரிடையே இருக்கும் உறவு வலுவடையும் வாய்ப்பு அதிகரிக்கும். நீங்கள் முதல் டேட்டிங்கின்போது திட்டமிட்டு உபயோகித்த வரிகள், கவிதைகள் போன்றவற்றை பற்றிய கவலை இனி தேவையில்லை.
உங்கள் காதலியை இம்ப்ரெஸ் செய்வதற்கு நீங்கள் நேர்மையாக இருப்பது மிகவும் முக்கியமான ஒன்றாகும். அவரிடம் செயற்கையாக நடந்து கொண்டு அவரை ஏமாற்றாமல் உண்மையாக நடந்து கொள்ள வேண்டும்.
ஒரு பெண்ணை ஈர்ப்பதற்கு முக்கியமாக விளங்குவது நேர்மையே. நீங்கள் நகைச்சுவை மற்றும் புத்திசாலித்தனமாக பேசுபவராக இருந்தால் பிரச்சனை இல்லை, அப்படியே தொடருங்கள்.
இதுவே நீங்கள் அமைதியான நபர் என்றால் சிறிது நகைச்சுவை உணர்வுடன் , செயற்கைதனம் இல்லாமல் உங்கள் பாணியிலேயே பேசுங்கள். இரண்டாவது டேட்டிங்கின் போது உங்கள் காதலியை ஈர்க்க இதோ சில வழிகள்…
* உங்கள் இரண்டாவது டேட்டிங்கிற்கு நேர்த்தியாகவும் அழகாகவும் உடை அணியுங்கள். இடத்திற்கு தகுந்தாற்போல் உடை அணிவது இப்பொழுதும் அவசியமான ஒன்றாகும். அவர் விரும்பத்தக்க வகையில் அழகாக உடை அணிந்து அவரை இம்ப்ரெஸ் செய்யுங்கள்.
* இரண்டாவது டேட்டிங்கை சற்று தனிமையான முறையில் இருக்குமாறு திட்டமிடுங்கள். இது இரண்டாவது டேட்டிங் என்பதால், உங்கள் காதலிக்கு உங்கள் மேல் சிறிது நம்பிக்கை ஏற்பட்டிருக்கும். அதனால், ஒரு வார இறுதியில் அவரை மதிய உணவிற்கோ அல்லது இரவு உணவிற்கோ அழைத்து நீங்களே சமைத்து பரிமாறலாம்.
* இந்த இரண்டாவது டேட்டிங் உங்கள் காதலிக்கு சவுகரியமாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.. அவரை சிரிக்க வைத்து மகிழ்ச்சியில் ஆழ்த்த நகைச்சுவை என்ற பெயரில் எல்லையை தாண்ட வேண்டாம். அதனை விடுத்து, அவரை பற்றி அடிப்படையான விஷயங்கள் மற்றும் சற்று தனிப்பட்ட சொந்த விஷயங்களை தெரிந்து கொண்டு உங்கள் உறவை வலுபடுத்துங்கள். சொந்த விஷயங்களை பற்றி கேட்கும் போது வரம்பு மீறக் கூடாது.
* அவசரப்பட்டு எதையும் செய்யாமல் ஒரு நல்ல பண்பாளராக இருங்கள். உங்கள் காதலியே தானாக முன் வந்து உங்களை தொட அனுமதிக்கும் வரை பொறுமையாக இருங்கள்.
* முதல் டேட்டிங்கின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது டேட்டிங் நிகழ்ந்துள்ளதால் அவருக்கு ஒரு பரிசு கொடுக்க திட்டமிடுங்கள். அதிக விலை உயர்ந்த பொருளாக இல்லாமல் அவர் விரும்பத்தக்க வகையில் அர்த்தமுள்ள பொருளாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள். ஒரு சிறிய பூங்கொத்து கூட அவரை இம்ப்ரெஸ் செய்யலாம்.
* உங்கள் இரண்டாவது டேட்டிங் நல்ல முறையில் இருந்தால், உங்கள் காதலி உங்களை தொட அனுமதித்தால் ஒரு மென்மையான முத்தத்தை கொடுங்கள். பிரெஞ்சு முத்தம் போன்றவற்றை தவிர்த்து மென்மையான முத்தத்தோடு நிறுத்திக் கொள்ளுங்கள்.
* இது உங்கள் இரண்டாவது டேட்டிங் என்பதால், சந்தர்ப்பம் அமையும் போதெல்லாம் அவளது கண்களை பார்க்க முயற்சி செய்யுங்கள். இதன் மூலமாக அவரிடம் நீங்கள் வைத்துள்ள ஈடுபாடு வெளிப்பட்டு உங்கள் தன்னம்பிக்கையால் அவரை ஈர்க்கலாம்.
* நேரம் கிடைக்கும் போதெல்லாம் அவரை பாராட்டுங்கள். அதிகமாகவோ பொய் புகழ்ச்சியாகவோ இல்லாமல் நீங்கள் அவரிடம் கொண்டுள்ள நேர்மையான அபிப்ராயங்களையும் கருத்துக்களையும் பாராட்டுங்கள். உங்கள் நேர்மையான கருத்துக்களை அவர் கண்டிப்பாக மதிப்பார்.
* வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருங்கள். உங்களது வேலையைப் பற்றியும் சொந்த விவரங்கள் பற்றியும் பொய் சொல்லாதீர்கள். ஒரு பெண்ணை இம்ப்ரெஸ் செய்ய உங்களின் வெளிப்படையான தன்மை மற்றும் நேர்மையை தவிர சிறந்த வழி வேறு எதுவும் இல்லை.
இந்த டேட்டிங்கின் முடிவு உங்களின் அடுத்த நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கான தருணமாக இருக்கும். நீங்களே முன்வந்து அடுத்த நடவடிக்கை குறித்து பேசினால் அவர்களை இம்ப்ரெஸ் செய்யும் விதமாக இருக்கும்.
Average Rating