ரஜினிக்கு அடுத்தது விஜயா…?

Read Time:3 Minute, 6 Second

Untitled-114தமிழ்த் திரையுலகில் வியாபார ரீதியாக கடந்த பல வருடங்களாக தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருபவர் ரஜினிகாந்த் மட்டுமே.

அவருடைய படங்களின் வசூலை அவருடைய படங்களே முறிடியத்தால்தான் உண்டு என்ற நிலைதான் இருந்து வருகிறது. ‘சிவாஜி’ படம் மூலம் உலக அளவில் பல புதிய மார்க்கெட்டை உருவாக்கிய ரஜினிகாந்த், மீண்டும் ‘எந்திரன்’ படம் மூலம் அதை இன்னும் பெரிதாக்கினார்.

சமூக வலைத்தளங்கள், இணையதளங்கள் மூலம் கடந்த சில வருடங்களாக ரஜினிகாந்த் பற்றிய பேச்சு இன்னும் அதிகமாகித்தான் வருகிறது.

அதே சமயம், ரஜினிக்கு அடுத்து யார் என்ற புதிய சர்ச்சை கடந்த சில மாதங்களுக்கு முன்பு உருவானது. விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார் என்று செய்திகள் வெளிவர ரஜினிகாந்த் இரசிகர்களும், அஜித் இரசிகர்களும் அதை எதிர்த்துக் குரல் கொடுக்க ஆரம்பித்தனர்.

கொஞ்ச நாட்களாக அடங்கியிருந்த அந்த சர்ச்சை நேற்று முதல் மீண்டும் அதிகரித்துள்ளது. தீபாவளிக்கு வெளிவந்த ‘கத்தி’ படம் வெளியான 12 நாட்களில் சுமார் 100 கோடி ரூபாய் வசூலித்ததை அந்தப் படத்தின் இயக்குனர் முருகதாஸ் வெளியிட, விஜய்தான் அடுத்த சூப்பர் ஸ்டார், வசூல் மன்னன் என அவருடைய இரசிகர்கள் கொண்டாட ஆரம்பித்தனர்.

ஒரு பக்கம் 12 நாட்களுக்குள் அவ்வளவு வசூலை அள்ள வாய்ப்பேயில்லை என்றும் சொல்கிறார்கள். கடந்த வார இறுதியிலிருந்தே ‘கத்தி’ படத்திற்கான இரசிகர்களின் வருகை குறைந்துவிட்டதாகவும் திரையரங்க வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள்.

இருந்தாலும் 10 நாட்களுக்குள் படம் எதிர்பார்த்ததை விடவும் நல்ல வசூலைக் கொடுத்திருக்கிறது என்றும் கணக்கு போட்டுச் சொல்கிறார்கள்.

இப்போது அஜித் அவருடைய ‘என்னை அறிந்தால்’ படம் மூலம் அவருடைய பாக்ஸ்-ஆபீஸ் நிலவரத்தை நிரூபித்தாக வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். விஜய் படமே 12 நாளில் 100 கோடி வசூலித்தது என்றால் எங்கள் ரஜினியின் ‘லிங்கா’ படம் 12 நாளில் 200 கோடியை வசூலிக்கும் என்று ரஜினியின் இரசிகர்களும் சொல்ல ஆரம்பித்து விடுவார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மகளை துஷ்பிரயோகம் செய்தவனை விருந்து வைத்துக் கொன்ற தந்தை!!
Next post பிடிக்கல்லன்னா பாக்காதீங்க!!