பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பழங்குடி பெண் தீயிட்டு தற்கொலை முயற்சி!!

Read Time:1 Minute, 33 Second

9c052319-f2ff-4b8c-b312-43969ea43cc6_S_secvpfசத்திஸ்கர் மாநிலத்தில் உள்ள சர்குஜா பிரிவு பகுதியை சேர்ந்த பழங்குடி பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானதை அடுத்து தீயிட்டு தற்கொலை செய்துகொள்ள முயற்சித்துள்ளார்.

கரபெல் பகுதியில் நேற்று காலை சுமார் 4.30 மணிக்கு இயற்கை உபாதைகளை கழிக்க வயலுக்கு சென்ற பழங்குடி பெண் ஒருவரை அதே பகுதியை சேர்ந்த ஷாம்நாத் எனும் 48 வயது நபர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கினார்.

இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் தனக்கு தவறாக ஏதோ நடந்துவிட்டதாக கருதிய அப்பெண், அவமானம் தாங்க முடியாமல் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.

உடனடியாக அம்பிகாபூர் மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட அப்பெண்ணின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாகவும், உடல் முழுவதும் 80 சதவீத காயங்கள் உள்ளதால் அப்பெண் உயிர் பிழைப்பது கடினம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post அரியலூர் அருகே வேலைக்கு சென்ற மனைவியை கடத்திய கணவர்!!
Next post மீனவர்கள் தூக்குமேடை செல்ல மோடியே காரணம் – வைகோ ஆவேசம்!!