மாலைத்தீவின் முக்கிய குற்றவாளி இலங்கையில்!!

Read Time:1 Minute, 48 Second

1797800151341410539maldive2மாலைதீவின் முக்கிய குற்றவாளி ஒருவர் இலங்கையில் வசிப்பதாக மாலைத்தீவு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மாலைதீவில் முக்கிய குற்றவாளியாக தேடப்படும் ஒருவர் தப்பிச்சென்று இலங்கையில் வசிப்பதாக மாலைதீவு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது.

இதனையடுத்து அவரைக் கைது செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவதாகவும் அந்த ஊடகம் குறிப்பிட்டுள்ளது.

அப்துல்லா லத்பி என்ற அவரை கைது செய்யமுடியும் என்று மாலைதீவின் உள்துறை அமைச்சர் உமர் நசீர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

ஆட்சியை கவிழ்ப்பதற்காக முயன்று 19 மாலைதீவியர்களின் உயிர் பலிக்கு காரணமாக இருந்தவர்களின் பின்னணியில் லத்பி இயங்கி வந்தார்.

இந்தநிலையில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட அவர் இலங்கைக்கு மருத்துவ சிகிச்சைக்காக வந்தவேளையில் தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் 2012ஆம் ஆண்டு மொஹமட் நசீத் ஜனாதிபதியாக இருந்தவேளையில் இடம்பெற்றது. உள்துறை அமைச்சரின் தகவல்படி 66 வயதான லத்பி இலங்கையிலேயே வசித்து வருகிறார் .

இந்தநிலையில் லத்பியின் தலைக்கு மாலைதீவு பொலிஸ் 75ஆயிரம் மாலைதீவு நாணயமான ரூபியாவை தருவதாக அறிவித்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 18 துப்பாக்கிகளுடன் 7 பேர் கைது!!
Next post கேரளாவில் சர்ச்சையை கிளப்பிய காதல் முத்தம் வலைத்தளம் முடக்கம்!!