பாப்பரசரின் விஜயம் உறுதி: பேச்சுவார்த்தையில் முடிவு!!

Read Time:2 Minute, 3 Second

1042119884downloadபுனித பாப்பரசரின் இலங்கைக்கான விஜயம் ஏற்கனவே திட்டமிட்டபடி ஜனவரி மாதம் 13 முதல் 15 ஆம் திகதி வரை நடக்கும் என்று திருகோணமலை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை தெரிவித்துள்ளார்.

வத்திக்கானில் இருந்து இலங்கை வந்த மூன்று பிரதிநிதிகள் இது குறித்து இலங்கை வெளியுறவு அமைச்சர் ஜி. எல். பீரிஸ் மற்றும் பாதுகாப்பு செயலர் கோட்டாபய ராஜபக்ஷ அகியோர் அடங்கிய அரசாங்க குழுவினரை சந்தித்துப் பேசிய பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாகவும் ஆயர் சுவாம்பிள்ளை கூறினார்.

உண்மையில் பாப்பரசரின் விஜத்தில் இலங்கை அரசாங்க தரப்பினர் மிகுந்த ஆர்வத்துடன் இருந்ததை இந்த சந்திப்பின் போது தாம் உணரக் கூடியதாக இருந்ததாக கூறிய ஆயர், அந்தச் சந்திப்பு மிகவும் சுமூகமாக இருந்ததாகவும் குறிப்பிட்டார்.

ஜனவரி மாத முதல் வாரத்தில் இங்கையின் ஜனாதிபதி தேர்தல் நடக்கலாம் என்ற வகையில் செய்திகள் வரும் நிலையில், அப்படியாக நடந்தால் திருச்சபைக்கு அதில் ஆட்சேபம் ஏதும் கிடையாதா என்று கேட்டதற்கு பதிலளித்த ஆயர் கிங்ஸிலி சுவாம்பிள்ளை, தேர்தல் திகதி அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லையாயினும், எந்த சூழ்நிலையிலும் பாப்பரசரின் விஜயத்துக்கு பூரண பாதுகாப்பு வழங்கப்படும் என்று இலங்கை அரசாங்க தரப்பினர் உத்தரவாதம் வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காண்பிக்காததால் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய கணவன்!!
Next post மரண தண்டனை கைதிகள் பரிமாற்ற மனு இன்று விசாரணைக்கு!!