பிரிட்டன் பாப் பாடகியின் காதில் ஒரு வாரம் இருந்த சிலந்தி!!

Read Time:1 Minute, 46 Second

3a36f074-bc5b-4ef4-9a5e-7e6d66342202_S_secvpfபிரபல பாடகி கேட்டி மெலுவாவின் காதில் ஒரு வாரத்திற்கு சிறிய சிலந்தி இருந்துள்ளது. கேட்டி மெலுவா என்னும் 30 வயது பாடகி ஒரு வார காலமாக தனது காதில் ஏதோ அரிப்புடன் சேர்ந்த சத்தம் கேட்டுகொண்டே இருந்ததை அடுத்து மருத்துவர்களிடம் சென்றார்.

கேட்டியை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது காதில் சிறிய சிலந்தி இருந்ததை அறிந்தனர். பின்னர் காதிலிருந்த சிலந்தியை மருத்துவர்கள் உயிரோடு அகற்றினர். இது குறித்து தெரிவித்த கேட்டி, ‘நான் பொதுவாக பெரிய ஹெட்போன்களை பயன்படுத்தி பாடல்கள் கேட்பேன். அதில் இருந்த சிலந்தி எனது காதிற்குள் நுழைந்து ஒரு வாரத்திற்கு அங்கேயே இருந்துள்ளது. என் காதில் இருந்து சிலந்தியை வெளியே எடுத்த மருத்துவர், அதனை ஒரு டெஸ்ட் டியூபில் வைத்துள்ளார்’ எனக் கூறினார்.

காதில் இருந்து எடுக்கப்பட்ட சிலந்தியை கேட்டி அவரது தோட்டத்தில் பத்திரமாக விட்டுவிட்டதாகவும், காது கேட்காமல் போய்விடுமோ என்ற அச்சத்தில் இருந்த அவர் தற்போது சிலந்தி அகற்றப்பட்டதால் நிம்மதியாக உள்ளதாகவும் அவரது செய்தி தொடர்பாளர் தெரிவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தம்புள்ளையில் பெண் வெட்டிக் கொலை!!
Next post அசைவ உணவுக்கு எதிராக லண்டனில் நிர்வாண போராட்டம்!!