3 வயது குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்த 50 வயது காமக் கொடூரன் தலைமறைவு!!

Read Time:1 Minute, 55 Second

83d0814b-e8bd-4f4d-962d-f21a2bdc744c_S_secvpfசத்தீஸ்கர் மாவட்டத்தில் சாக்லேட் வாங்கித் தருவதாக ஆசைகாட்டி 3 வயது பெண் குழந்தையை சீரழித்த 50 வயது ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.

ராய்கர் மாவட்டத்தில் உள்ள புக்குர்ரி கிராமத்தைச் சேர்ந்த ஒரு 3 வயது குழந்தை, அங்குள்ள தொழிற்பேட்டை பகுதியில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது, அவ்வழியாக போதை தலைக்கேறிய நிலையில் வந்த சுக்தேவ் தனுஹர்(50) என்பவன் சாக்லேட் வாங்கித் தருவதாக அந்த சிறுமிக்கு ஆசைகாட்டி தனிமையான இடத்தில் உள்ள தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றான்.

பச்சிளம் தளிர் என்றும் பாராமல், தனது தகாத இச்சையை தீர்த்துக் கொள்ள முயன்ற அந்த காமக் கொடூரன், வலியால் குழந்தை வீறிட்டு அலறத் தொடங்கியதும் அங்கிருந்து தப்பியோடி விட்டான்.

குழந்தையின் அழுகுரலைக் கேட்டு அந்த இடத்துக்கு விரைந்த பெற்றோர், அவளது உடலில் காயங்கள் இருப்பது கண்டு பதறிப்போய் போலீசில் புகார் அளித்தனர். சிறுமிக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவள் கொடூரமான முறையில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டது உறுதியானது.

இதனையடுத்து, குழந்தை கூறிய அடையாளங்களை வைத்து தலைமறைவாக இருக்கும் குற்றவாளியை பிடிக்க தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சேலம் அருகே ரெயிலில் வந்த ஆந்திர இளம்பெண் மிரட்டி கற்பழிப்பு: வாலிபர் கைது!!
Next post செல்போனில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ காண்பிக்காததால் மனைவியை மாடியிலிருந்து கீழே தள்ளிய கணவன்!!