தலைநகர தமிழர்களுக்கு தொடர்மாடி வீடுகள்: பாதுகாப்பு செயலருடன் பேச்சு!!

Read Time:3 Minute, 15 Second

950138066prabaகொழும்பு மாநகரில் வாடகை வீடுகளில் நிரந்தரமாக வசிக்கும் தமிழ் மக்களுக்கு கட்டிக் கொண்டிருக்கும் தொடர்மாடி வீடுகளை வழங்குவது சம்பந்தமாக ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சந்திப்பின் போது பாதுகாப்பு, நகர அபிவிருத்திசபை செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ தன்னிடம் உறுதியளித்துள்ளதாக ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவரும் தொலைத்தொடர்புகள், தகவல் தொழில்நுட்பவியல் பிரதி அமைச்சருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் ஜனநாயக மக்கள் காங்கிரஸ் விடுத்துள்ள அறிக்கையில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

நிரந்தரமாக கொழும்பில் வாடகை வீட்டில் வாழும் தமிழ் மக்களுக்கு வீடு இல்லா பிரச்சினைகள் பற்றி கலந்துரையாடியுள்ளேன். இவர்களுக்கு அரசாங்கத்தின் மூலமாக கிடைக்கப் பெறும் வீடுகள் வழங்க வேண்டும் என்று தெரிவித்தேன்.

இதன் போது எனது கருத்தை ஏற்றுக் கொண்ட பாதுகாப்பு செயலாளர் இப்பொழுது கட்டப்பட்டுக் கொண்டிருக்கும் பத்தாயிரம் வீடுகளில் 1000 வீடுகளை வீடுகள் உடைக்கப்பட்டவர்களுக்கு கொடுக்க வேண்டியிருக்கிறது என்றும் மிகுதி 9000 வீடுகளும் மேலும் கட்டப்படவிருக்கும் 40000 வீடுகளும் கொழும்பு மாவட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவர்களுக்கு குறைந்தபட்ச கட்டண அடிப்படையில் 25 வருட மாதாந்த கொடுப்பனவில் வழங்கப்படும் என தெரிவித்ததுடன் நிரந்தரமாக கொழும்பு நகரில் வாடகை வீட்டில் வசிப்பவர்களின் விபரங்களைப் பெற்றுத் தர வேண்டும் எனவும் என்னிடம் தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் அடுத்த வாரம் முதல் கொழும்பு நகரத்தில் நிரந்தர வதிப்பாளர்கள், வாக்கு பதிவுள்ளவர்களுக்கு வீட்டுக்கான விண்ணப்ப படிவங்களை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யவுள்ளேன். இது கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் என்ற காலத்தில் கல்வித்துறைக்கு அப்பால் செய்து கொடுக்கப்படும் தேவையாக நான் நினைக்கின்றேன்.

தமது கனவான அரச தொடர்மாடி இல்லங்களைப் பெற்றுக் கொள்ள தேவையானவர்கள் எனது அலுவலகத்தை அனுகுமாறு கேட்டுக் கொள்கின்றேன்.இதற்கென்று பதிவு செய்வதற்கான தனியான ஒரு பிரிவு ஒன்றை அமைத்திருக்கின்றேன்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பஸ்கள் – கார் மோதி 22 பேர் வைத்தியசாலையில்!!
Next post லஞ்சம் பெற்ற பொலிஸ் பெரியவர் கைது!!