பதவிக்காக அரசியல் செய்வதை கைவிடுகிறது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ்!!!

Read Time:1 Minute, 25 Second

2134344724277641847rauf-hakeem2எதிர்காலத்தில் பதவி அரசியலைக் கைவிட முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்திருப்பதாக அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம், பொத்துவில், பசறிச்சேனையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அமைச்சுப் பதவிகள் உள்ளிட்ட பதவி அரசியல் மூலம் முஸ்லிம்களின் அரசியல் இருப்பு, உரிமைகள், எதிர்பார்ப்புகள் என்பவற்றை நிறைவேற்றுவதில் சிக்கல்களை எதிர்கொள்ள நேரிட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே எதிர்காலத்தில் பதவி அரசியல் நிலைப்பாட்டிலிருந்து வெளியே வர முஸ்லிம் காங்கிரஸ் தீர்மானித்துள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் நாட்களில் நடைபெறவுள்ள தேசிய தேர்தலில் யாரும் எதிர்பார்த்திராத முக்கியமான நகர்வு ஒன்றை கட்சி மேற்கொள்ளவுள்ளதாக ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 7 மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் தொடர்கிறது!!
Next post நடிகைகளுக்கு அதிர்ச்சி கொடுத்த நடிகை!!