த்ரிஷா – ராணா பிரிவுக்கு நானா காரணம்? நடிகை காட்டம்!!

Read Time:2 Minute, 20 Second

Untitled-11111தமிழ் நடிகை த்ரிஷாவும், தெலுங்கு நடிகர் ராணாவும் பல ஆண்டுகளாக காதலித்து வருகிறார்கள். திடீரென்று பிரிவார்கள், திடீரென்று சேர்வார்கள்.

கடந்த சில மாதங்களாக இருவரும் கடும் நெருக்கம் காட்டினார்கள். பொது நிகழ்ச்சிகளுக்கு கணவன் மனைவி போன்று சேர்ந்து வந்து கலந்து கொண்டார்கள். இதனால் இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளப் போகிறார்கள் என்ற தகவலும் வெளியானது.

இந்த நிலையில் ராணாவும், த்ரிஷாவும் பிரிந்து விட்டதாகவும் அதற்கு காரணம் கன்னட நடிகை ராகிணி திவேதி ராணாவுடன் நெருக்கமாக இருப்பதுதான் என்று கூறப்பட்டது.

இதுகுறித்து ராகிணி தனது டுவிட்டரில் ஆவேசமாக பதிலளித்துள்ளார். “நான் ராணாவுடன் எங்கும் டேட்டிங் செல்லவில்லை. ஆனால் அதுபற்றி வரும் செய்திகளை பார்க்கும்போது எனக்கு கோபம் வருகிறது. தயவுசெய்து இதுபோன்று மலிவாக பேசுவதையும், எழுதுவதையும் நிறுத்துங்கள்” என்று எழுதியிருக்கிறார்.

அவர் மேலும் கூறும்போது “த்ரிஷா, ராணா பிரிந்திருந்தால் அதற்கு நான் காரணமல்ல. அது அவர்களின் தனிப்பட்ட விஷயம். அதில் என்னை இழுப்பது அசிங்கமாக உள்ளது. ராணாவும் நானும் இருக்கும் செல்பி போட்டோ ஒரு விருது வழங்கும் விழாவில் பொது இடத்தில் எடுக்கப்பட்டது. நான் கன்னடத்தில் பிசியான நடிகை. ராணா தெலுங்கில் பிசியான நடிகர் ஒருவரை ஒருவர் சந்தித்துக் கொண்டபோது அந்த சந்திப்பின் நினைவாக எடுத்துக் கொண்ட படம் அது. அதை வைத்துக்கொண்டு கதை கட்டுகிறார்கள்” என்கிறார் ராகிணி.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post காட்பாடியில் கள்ளத்தொடர்பு வைத்த தாய் வெட்டிக்கொலை: மகன் கைது!!
Next post பண்ருட்டி அருகே சிறுமியின் திருமணம் நிறுத்தம்!!