கள்ளக்குறிச்சியில் சொகுசு பங்களாவில் விபசாரம்: 8 பெண்கள் உள்பட 13 பேர் கைது!!

Read Time:1 Minute, 57 Second

sexual-கள்ளக்குறிச்சி கவரைத்தெருவில் ஒரு சொகுசு பங்களாவில் விபசாரம் நடப்பதாக கள்ளக்குறிச்சி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்–இன்ஸ்பெக்டர்கள் சுமதி, மாணிக்க ராஜா, அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி மற்றும் போலீசார் நேற்று மாலை அந்த சொகுசு பங்களாவில் அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்த பங்களாவில் பெரிய அளவில் விபசாரத்தொழில் நடப்பது தெரியவந்தது. இதையடுத்து அவர் பங்களாவில் இருந்த 8 பெண்கள் உள்பட 13 பேரை சுற்றி வளைத்து பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர்கள் சின்னசேலம் மரவாநத்தத்தை சேர்ந்த ராசாத்தி (47), கள்ளக்குறிச்சியை சேர்ந்த நிஷா (43), அகரகோட்டாலத்தை சேர்ந்த வையாபுரி (47), விருகாவூரை சேர்ந்த வேலுமணி (45), சேலம் காயக்கன்பட்டியை சேர்ந்த சரவணன் (33), ரோடு மாமந்துரை சேர்ந்த சிவா (33), தியாக துருகத்தை சேர்ந்த கலில் (25) ஆகியோர் புரோக்கர்களாக செயல்பட்டதும், கள்ளக்குறிச்சியை சேர்ந்த நளினி (28), சுமதி (30), சென்னை தியாகராய நகரை சேர்ந்த பிரியா (28) மற்றும் சாத்த புத்தூரை சேர்ந்த உஷா (30) உள்பட 6 பெண்களை விபசாரத்தில் ஈடுபடுத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 13 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post கர்நாடகத்தில் கடத்திச் சென்று பலாத்காரம் செய்யப்பட்ட 14 வயது மாணவி மரணம்!!
Next post மனைவியை கொலை செய்து விட்டு 4 ஆண்டுகள் தலைமறைவான கணவர் கைது!!