உலகின் பணக்காரப் பெண் இவர்தான்!!

Read Time:1 Minute, 55 Second

2102237301Untitled-1கிறிஸ்டி வால்டன் தான் உலகின் பணக்கார பெண் ஆவார். வெல்த் எக்ஸ் உலகின் பணக்கார பெண்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

வட அமெரிக்கா, ஐரோப்பா, பசிபிக், இலத்தீன் அமெரிக்கா, ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் ஆப்பிரிக்கா ஆகிய ஏழு பகுதிகளைச் சேர்ந்த பெண்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

கிறிஸ்டி வால்டன் வால்மார்ட் நிறுவனத்தை தொடங்கிய சாம் வால்டனின் மகன் ஜான் டி. வால்டனின் மனைவி கிறிஸ்டி தான் உலகின் பணக்கார பெண் ஆவார்.

ஜான் இறந்த பிறகு அவருக்கு வால்மார்ட் நிறுவன பங்குகள் கிடைத்தன. அவரின் சொத்து மதிப்பு 37.9 பில்லியன் டொலர் ஆகும். வட அமெரிக்காவின் பணக்கார பெண்ணும் கிறிஸ்டி தான்.

பிரான்ஸைச் சேர்ந்த அழகுசாதன பொருட்கள் தயாரிக்கும் நிறுவனமான லாரியல் குடும்பத்து வாரிசான லிலியன் பெட்டன்கோர்ட் 31.3 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் உலகின் 2வது பணக்கார பெண்ணாக உள்ளார்.

ஐரோப்பாவின் பணக்கார பெண் லிலியன். சுரங்க தொழில் செய்து வரும் குடும்பத்தைச் சேர்ந்த அவுஸ்திரேலியாவின் ஜினா ரெய்ன்ஹார்ட் 14.8 பில்லியன் டொலர் சொத்துக்களுடன் உலகின் 3வது பணக்கார பெண்ணாகவும், பசிபிக் பகுதியின் பணக்கார பெண்ணாகவும் இடம்பெற்றுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வளர்த்தவரையே காட்டிக் கொடுத்த நாய்!!
Next post எகிப்தில் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படும் 8 ஓரினச் சேர்க்கையாளர்களுக்கு 3 ஆண்டு சிறை!!