சீனப் பிரஜைகள் ஐவர் வந்தது எதற்காக?

Read Time:1 Minute, 39 Second

517137658Untitled-1நேற்று இரவு 11.10 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்திறங்கிய விமானத்தில் இருந்து ஐந்து சீனப்பிரஜைகள் நாட்டை வந்தடைந்துள்ளனர்.

இவர்கள் இலங்கைக்கு வந்ததன் நோக்கம் மற்றும் மீண்டும் செல்வதற்கான விமான டிக்கட்டுக்கள் உள்ளதா என விமான நிலைய அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.

எனினும் குறித்த ஐவரும் எந்தவொரு கேள்விக்கும் பதிலளிக்காததோடு, விமான நிலையத்தில் பதற்ற நிலையை தோற்றுவிப்பது போல் நடந்து கொண்டதாகவும் தகவல் வௌியாகியுள்ளது.

மேலும் இவர்களது பயணப் பைகளில் இருந்து சட்டவிரோத சிகரெட்டுக்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.

இதன்படி சீனப் பிரஜைகள் ஐவரையும் மீண்டும் சீனாவுக்கே அனுப்ப விமான நிலைய அதிகாரிகள் தீர்மானித்தனர்.

வந்த விமானத்திலேயே அவர்களை ஒப்படைக்க முற்பட்ட போது, அந்தக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் விமானத்தினுள் பதற்ற நிலையை தோற்றுவிப்பது போன்று நடந்து கொண்டமையே இதற்குக் காணரம் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

இதனால் ஐவரும் விமான நிலையத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மது அருந்தி, ரகளை செய்த இலங்கை அகதிகள் மூவர் மீது வழக்கு!!
Next post மண்சரிவு அபாயம் – 63 பேர் வௌியேற்றம்!!