ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்திற்கு புலிகள் அமைப்பின் பணம்?

Read Time:3 Minute, 1 Second

704492585thissa-attanayakeஎதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின் போது மஹிந்தவின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு விடுதலைப் புலிகளின் பணம் பயன்படுத்தப்படலாம் என்று ஐ.தே.க. சந்தேகம் தெரிவித்துள்ளது.

கொழும்பில் இன்று (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இந்த சந்தேகத்தை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்தும் கருத்துத் தெரிவித்துள்ள அவர், ஐரோப்பிய ஒன்றியத்தில் விடுதலைப் புலிகள் மீதான தடை நீக்கப்பட்டுள்ளது. அங்குள்ள நாடுகளில் சுமார் 25 கோடி அளவில் விடுதலைப் புலிகளுக்கு சொத்துக்கள் உள்ளன.

தற்போதைய நிலையில் கே.பி, கருணா அம்மான் போன்ற விடுதலைப் புலிகளின் தலைவர்கள் அரசாங்கத்தின் நிழலில் இருக்கின்றார்கள். அவர்கள் ஊடாக இந்தப் பணத்தைப் பெற்றுக்கொள்வதில் அரசாங்கம் ஈடுபடலாம். அவ்வாறு விடுதலைப் புலிகளின் பணத்தை கைப்பற்றி அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்கு பயன்படுத்தக் கூடும் என்ற சந்தேகம் எங்களுக்கு உண்டு.

2005ம் ஆண்டிலும் விடுதலைப் புலிகளின் பணம் அரசாங்கத்தின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளுக்குப் பயன்பட்டது. அதனை மங்கள சமரவீர மற்றும் ஸ்ரீபதி சூரியாரச்சி ஆகியோர் அம்பலப்படுத்தி இருந்தார்கள். இவ்வாறான ஒரு உள்நோக்கத்துடன் தான் விடுதலைப் புலிகளின் தடை தொடர்பான வழக்கில் அரசாங்கம் ஆர்வம் காட்டவில்லை. தடைநீக்கப்பட்டதற்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

தற்போது குற்றவாளிகளுக்குத் தண்டனை என்பதே இல்லை என்றாகிவிட்டது. ஏனெனில் எல்லாக் குற்றவாளிகளும் அலரிமாளிகைக்குள் தான் போய்ப் பதுங்கிக் கொள்கின்றார்கள். அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு கிடைக்கின்றது.

ஐ.தே.க.ஆட்சிக்கு வந்தால் கடந்த காலத்திலிருந்து செயற்பாட்டுக்கு வரும் வகையில் சட்டதிருத்தம் கொண்டு வருவோம். தற்போது குற்றம் செய்துள்ளவர்களை அந்த சட்டத்திருத்தத்தின் மூலம் தண்டிப்பதற்கு நடவடிக்கை எடுப்போம் என்றும் திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post புலி துப்பாக்கி வைத்திருந்தவருக்கு ஒரு வருட கடூழிய சிறை!!
Next post இந்தியாவிலும் புலித்தடை நீங்கும் – வைகோ நம்பிக்கை!!