மது குடிப்பது தவறாம்! கையில் இருப்பது என்னவோ..?

Read Time:2 Minute, 20 Second

Kajal-Partying-Photos-Kajal-Birthday-Party-Photos-Kajal-Drinking-Photos-kajal-Agarwal-Drinkaing-Pics-Kajal-Birthday-party-Drinking-Pics-Kajal-Party-Picsகாஜல் அகர்வால் தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடிக்கிறார். இந்தியிலும் இரண்டு படங்கள் கைவசம் உள்ளன. சமீபத்தில் ரிலீசான கோவிந்துரு அந்தாரிவாதலே தெலுங்கு படத்தில் காஜல் அகர்வால் ஓட்டல் பாரில் மது குடிப்பது போன்ற காட்சி இடம் பெற்று இருந்தது.

இதை வைத்து காஜல்அகர்வால் அடிக்கடி ‘பப்’ பார் போன்றவற்றுக்கு செல்லக்கூடியவர் என்ற விமர்சனங்கள் கிளம்பின. இதுகுறித்து காஜல் அகர்வாலிடம் கேட்டபோது அவர் கூறியதாவது:–

அந்தாரிவாதுலே படத்தில் டைரக்டர் என்னை அணுகி கதை சொன்னபோது மதுகுடிக்கும் காட்சி ஒன்று உள்ளது என்றும் அதில் நான் மது அருந்துவதுபோல் நடிக்க வேண்டும் என்றும் சொன்னார். எனக்கு தயக்கமாக இருந்தது. பிறகு அவரே என்னிடம் நிறைய பெண்கள் ‘பப்’களுக்கு அடிக்கடி செல்கிறார்கள் என்றார். அங்கு பெண்கள் மது குடிப்பது சகஜமாக நடக்கிறது என்றும் கூறினார். அதனால் நான் நடித்தேன்.

பெண்கள் மது குடிப்பது பற்றியெல்லாம் எனக்கு தெரியாது. நான் மது அருந்தியது இல்லை. ஆச்சாரமான குடும்பத்தில் இருந்து நான் வந்து இருக்கிறேன். சிறு வயதில் இருந்தே எது சரி, எது தப்பு என்பதை சொல்லி என்னை வளர்த்துள்ளனர். நண்பர்களுடன் ‘பப்’களுக்கு போகும்போது பழரசம் ஆர்டர் பண்ணி அருந்துவேன். பெண்கள் ஆனாலும் சரி, ஆண்கள் ஆனாலும் சரி மது குடிப்பது கெட்ட பழக்கம். இதனால் நிறைய குடும்பங்கள் பாதிக்கப்பட்டு உள்ளன.

சினிமாவில் இதுபோன்ற காட்சிகள் வைக்கப்படுவது ஒரு ஜாலிக்காகத்தான். அதை வாழ்க்கையில் யாரும் பின்பற்றக் கூடாது.
இவ்வாறு காஜல் அகர்வால் கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பண்டாரவளை இபோச பஸ் விபத்தில் 33 பேர் படுகாயம்!!
Next post மதுவுக்கு நாளை மட்டும் முற்றுப்புள்ளி!!