தந்தை-மகன் கொலை: ராணுவவீரர் உள்பட 2 பேர் கைது!!
ராணிப்பேட்டை அடுத்த மேல்பாடி அருகே உள்ள மகிமண்டலம் காட்டில் உள்ள பிகுவார பள்ளி காட்டு பகுதியில் எரிந்த நிலையில் வாலிபர் பிணம் கிடப்பதாக மேல்பாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதனையடுத்து போலீசார் அங்கு சென்று பார்த்தனர். அங்கு சுமார் 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் தலையை தவிர உடல் முழுவதும் எரிக்கப்பட்ட நிலையில் கருகி பிணமாக கிடந்தார்.
அதே போல் அந்த இடத்தில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் சிவபுரம் கிராமத்தில் உள்ள காட்டு பகுதியில் மற்றொரு வாலிபர் பிணம் எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தது.
அங்கு பிணமாக கிடந்த வாலிபருக்கு சுமார் 25 வயது இருக்கும். வாலிபர் தலையில் கல்லால் நசுக்கப்பட்டு பின்னர் எரித்து கொலை செய்துள்ளனர்.
போலீசார் 2 பேரின் பிணத்தையும் மீட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் ஒரே நாளில் அடுத்தடுத்து 2 வாலிபர்கள் எரித்து கொலை செய்யப்பட்டு கிடப்பதால் 2 கொலைக்கும் ஒரே தொடர்பு இருக்கலாம் என என்ற கோணத்தில் போலீசார் விசாரித்தனர்.
சம்பவ இடத்தில் போலீசாருக்கு சில தடயங்கள் கிடைத்தன. மேலும் கால் தடம் ஒன்றும் இருந்தது. மேலும் 2 சம்பவங்களும் ஒரே மாதிரியாக இருந்தன.
இதனையடுத்து போலீசார் விசாரணை முடுக்கி விட்டனர். அதில் திடுக்கிடும் தகவல் வெளியானது.
முதற்கட்ட விசாரணையில் இறந்தவர்கள் இமாச்சல பிரதேச மாநிலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற ராணுவவீரர் பீம்ராஜ் (வயது 45) அவரது மகன் மனோஜ் (25) என்பது தெரியவந்தது.
வடமாநிலத்தை சேர்ந்த இவர்கள் இங்கு எப்படி வந்தார்கள். கொலைக்கான காரணம் என்ன என்ற பல கேள்விகளுடன் தனிப்படை போலீசார் தீவிர விசாரணையில் இறங்கினர்.
அதில் மேல்பாடி சின்னகேசகுப்பம் கிராமத்தை சேர்ந்த ராணுவவீரர் மகேந்திரன் என்பவருக்கு கொலையான பீம்ராஜிடன் தொடர்பு இருந்தது தெரியவந்தது. இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் மகேந்திரனை பிடித்து விசாரித்தனர்.
அப்போது பீம்ராஜ், மனோஜ் இருவரையும் மேல்பாடிக்கு வரவழைத்து மகேந்திரன் அவரது கூட்டாளி காளி ஆகியோர் சேர்ந்து கொலை செய்து வீசியது தெரியவந்தது.
பீம்ராஜீம் மகேந்திரனும் ஒன்றாக பணியாற்றி இருக்கிறார்கள். பீம்ராஜ் ஓய்வு பெற்றதும் அவரது மகனை ராணுவத்தில் சேர்க்க முயற்சி செய்தார்.
பணம் கொடுத்தால் மனோஜை ராணுவத்தில் சேர்த்துவிடலாம் என மகேந்திரன் கூறியுள்ளார். அவரது பேச்சை கேட்டு பணத்துடன் மகனை அழைத்துக் கொண்டு பீம்ராஜ் ராணிப்பேட்டை வந்தார்.
பணத்துடன் வரும் பீம்ராஜை தீர்த்து கட்டி விட்டு பணத்தை எடுத்துக் கொள்ள ராணுவவீரர் மகேந்திரன் முடிவு செய்தார். அவரது கூட்டாளிகள் காளியை உடன் சேர்த்துக் கொண்டார்.
ஒரு காரில் பீம்ராஜ், மனோஜ் இருவரையும் அழைத்துக் கொண்டு மகிமண்டலம் காட்டு பகுதிக்கு சென்றனர். அங்கு வைத்து பீம்ராஜை கழுத்தை நெறித்து கொன்றனர். மனோஜை தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்துள்ளனர்.
பின்னர் அடையாளம் தெரியாமல் இருக்க 2 பேர் உடலையும் எரித்துள்ளனர். மேலும் வெவ்வேறு இடங்களில் உடல்களை வீசி சென்றதும் தெரியவந்தது.
போலீசார் ராணுவவீரர் மகேந்திரன் மற்றும் அவரது கூட்டாளி காளி ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
Average Rating