40,000 ஆண்டுகள் பழமையான ஓவியம்!!

Read Time:2 Minute, 24 Second

paintingஉலகின் மிக பழமையான ஓவியங்கள் சிலவற்றை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள்இந்தோனேஷியாவில் கண்டுபிடித்துள்ளனர். இந்த ஓவியங்கள் 40000 ஆண்டுகளுக்குமுந்தியவை என்பதுதான் அதிர்ச்சி மிகுந்த செய்தி.

இந்தோனேஷியாவில் உள்ள சுலாவேசி என்ற இடத்தில் உள்ள குகையில் சமீபத்தில்தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு நடத்தியதில் பழமையான ஓவியங்கள் அந்தகுகையில் இருந்ததை கண்டுபிடித்தனர். அவற்றின் வயதை நவீன டெக்னாலஜி மூலம்சோதனை செய்து பார்த்ததில் மிகவும் அதிர்ச்சிகரமான தகவல்கள் ஆய்வாளர்களுக்குகிடைத்துள்ளது.

40000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதன் நாகரீகமாக வாழ்ந்து வந்ததையே இந்தஓவியங்கள் நிரூபிக்கின்றன என்று தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் தலைவர்கூறியுள்ளார். ஆஸ்திரேலிய மற்றும் இந்தோனேஷ்யா ஆராய்ச்சியாளர்கள் இணைந்துகண்டுபிடித்த இந்த குகை ஓவியங்கள் மிகவும் கவனத்துடன் கையாளப்பட்டு, அவற்றைதற்போது பாதுகாத்து வருவதாகவும், இந்த ஓவியங்களில் இருந்து பழங்காலத்தில்வாழ்ந்த மனிதர்களின் நாகரீகங்களை தெரிந்து கொள்ளலாம் என்றும்ஆராய்ச்சியாளர்கள் கூறினர்

ஆனாலும் வயதில் இதற்கு முந்தைய ஓவியங்களும் உலகில் இருக்கின்றது என்பதுகுறிப்பிடத்தக்கது. வடக்கு ஸ்பெயின் நாட்டில் உள்ள Castillo cave in Cantabria என்ற பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட ஓவியங்கள் இதைவிட பழமையானவைஎன்று ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. ஸ்பெயின் ஓவியங்கள் 40,800 வருடங்கள்பழமையானவை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இந்தோனேஷிய ஓவியங்கள் ஆசியஅளவில் பாமையான ஓவியங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திருப்பத்தூரில் நகை அடகு பிடித்து 400 பவுன் மோசடி: கணவன்–மனைவி மீது 50–க்கும் மேற்பட்டோர் புகார்!!
Next post கல்லூரி மாணவிகள் குளிப்பதை படமெடுத்த வாலிபர் மீது வழக்கு!!