பெண் ஊழியர் கற்பழிப்பு: ஐ.டி. நிறுவன முதலாளிக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை!!
பெண் ஊழியரை கற்பழித்த ஐ.டி. நிறுவன முதலாளிக்கு 10 வருட கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் பிரிவில் பட்டப்படிப்பு படித்த சென்னையை சேர்ந்த பூஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் வேலை தேடி வந்துள்ளார். அப்போது சென்னையை சேர்ந்த வேர்ல்டு பிஸ் குளோபல் சர்வீஸஸ் என்ற நிறுவனம் பணியாளர்களை தேர்ந்தெடுத்து வருவது அவருக்கு தெரிந்தது.
இதையடுத்து நேர்முகத் தேர்வுக்கு அவர் சென்றுள்ளார். முதல் ரவுண்டில் மனித வள அதிகாரியை சந்தித்து அவரது கேள்விகளுக்கு பூஜா பதிலளித்துள்ளார். இதில் தேர்வானவுடன் அந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் அந்தோணி ஜான் மில்டனை நேர்முக தேர்வில் சந்தித்துள்ளார். அப்போது அவரது ஒரிஜினல் சான்றிதழ்களை பெற்றுக்கோண்ட அந்தோணி அவருக்கு பணிநியமனத்துக்கான ஆணையை வழங்கியுள்ளார்.
அதில் குறிப்பிட்ட நிபந்தனைகளை படித்த பின்பாவது பூஜா உஷாராகியிருக்கவேண்டும். அதாவது தினமும் காலை 7:45 மணியளவில் பூஜா பணிக்கு வரவேண்டும். பணிக்கு வரும் போது முட்டிக்கு மேல் ஆடை அணிய வேண்டும் என்று நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதில் உள்ள வக்கிரத்தை பூஜா உணரவில்லை.
21 வயதே நிரம்பிய பூஜாவுக்கு அந்தோணியின் வில்லங்கத்தனமும் புரியவில்லை. பணி நியமனம் பெற்ற மறுநாள் வேலைக்கு சேன்ற பூஜாவை தேநீர் எடுத்து வரச்சொன்ன அந்தோணி அவரது ஆடைகளை களையுமாறு உத்தரவிட்டுள்ளான். ஆனால் பூஜா அதற்கு மறுக்கவே அவரது தலையை பிடித்து இழுத்து கண்ணாடி மேஜையின் மீது தள்ளி, முகத்தில் மயக்க மருந்து தெளித்துள்ளான். இதில் பூஜா மயங்கி விழ அவரை அந்தோணி ஆசை தீர கற்பழித்துள்ளான்.
நினைவு திரும்பிய பூஜா, தன்னுடைய உடலில் ஒரே ஒரு துண்டு மட்டும் சுற்றப்பட்டிருப்பதை பார்த்து அதிர்ந்து பின் அழுது புலம்பியுள்ளார். அப்போது பூஜாவையும், அவரது தாயாரையும் கொன்று விடுவேன் என அந்தோணி மிரட்டியுள்ளான். மேலும் தான் பூஜாவை கற்பழித்த காட்சியை வீடியோ படம் எடுத்துள்ளதாகவும், அதை இன்டர்நெட்டில் வெளியிடுவேன் எனவும் மிரட்டியிருக்கிறான். இதனால் பயந்து போன பூஜா, நாளடைவில் மிரட்டலுக்கு பயந்து பலமுறை அவனது இச்சைக்கு இணங்கியுள்ளார்.
அப்போது பூஜாவை அடித்து துன்புறுத்திய சம்பவமும் நடந்துள்ளது. ஒரு கட்டத்தில் அலுவலகத்தில் பணிபுரியும் மற்ற பெண் ஊழியர்களையும் தன்னுடன் பாலியல் உறவு கொள்ள அழைத்து வரவேண்டும் என்று அந்தோணி மிரட்டியுள்ளான். மிரண்டு போன பூஜா தனது வீட்டில் தற்கொலைக்கு முயன்றுள்ளார். அப்போது பூஜாவை அவரது தாயும், சகோதரியும் காப்பாற்றி மருத்துவமனையில் சேர்த்தனர்.
அதன்பிறகே தனக்கு நேர்ந்த கொடுமையை பூஜா தன் தாயிடம் தெரிவித்தார். உடனடியாக அந்தோணி மீது சென்னை மாநகர காவல் ஆணையரிடம் பூஜா புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அந்தோணி கைது செய்யப்பட்டு அவன் மீது வழக்கு நடைபெற்று வந்தது. இவ்வழக்கை விசாரித்த பெண்கள் நீதிமன்ற நீதிபதி மீனா சதீஷ், அந்தோணிக்கு 10 வருட கடுங்காவல் சிறை தண்டனை விதித்து உத்தரவிட்டார்.
Average Rating