பின்லேடன் சுட்டுக்கொல்லப்பட்ட பின் 5 ஆண்டுகள் வாழ்ந்தது எப்படி?

Read Time:2 Minute, 17 Second

583111937Osama-binசர்வதேச நாடுகளை அச்சுறுத்தி வந்த அல்கொய்தா தீவிரவாதிகளின் தலைவர் பின்லேடன் பாகிஸ்தான் அபோதாபாத்தில் கடந்த 2011–ம் ஆண்டு பிப்ரவரி 2–ந் தேதி சுட்டுக் கொல்லப்பட்டார். அவரை அமெரிக்காவின் ‘நேவி சீல்’ என்ற அதிரடிப்படை சுட்டுக் கொன்றது.

ஆனால் அவரது உடலை ஒப்படைக்கவில்லை. சுட்டுக் கொல்லப்பட்ட 24 மணி நேரத்தில், கடலுக்குள் புதைத்து விட்டதாக கூறப்பட்டது. அவரது உடலை 100 பவுண்ட் எடையுள்ள இரும்பு சங்கிலியால் உருவாக்கப்பட்ட பைக்குள் வைத்து நடுக் கடலில் வீசியதாக அமெரிக்க உளவுப்படை சி.ஐ.ஏ.யின் முன்னாள் இயக்குனரும், முன்னாள் ராணுவ மந்திரியுமான லியோன் பனேட்டா கூறியுள்ளார்.

மேலும் இந்த தகவலை பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி அஷ்பர் வேஷ் கயானியிடம் அமெரிக்க ராணுவ தலைமை அதிகாரி மைக் முல்லன் தெரிவித்தார். அப்போது தாக்குதல் நடத்தி அவரை கைது செய்யும்படி கயானி கூறினார். ஆனால் அவரை சுட்டுக் கொன்று விட்டதாக முல்லன் தெரிவித்ததாகவும், மேலும் 5 ஆண்டுகள் அங்கு பின்லேடன் வாழ்ந்ததை மறைத்து விட்டதாக கூறியதாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த தகவல் பனேட்டா எழுதிய புத்தகத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பாகிஸ்தான் ராணுவ தலைமை தளபதி கயானி கருத்து தெரிவித்துள்ளார்.

அதில், பின்லேடன் சுட்டுக் கொல்லப்பட்டது மற்றும் அவரது உடல் என்ன ஆனது என்பது குறித்த மர்மங்களை அமெரிக்கா பகிரங்கமாக உடைத்து உலகிற்கு தெரிவிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 3 அன்டிமார் – 3 மகள்மார் – சமாளிப்பாரா ஆம்பள!!
Next post மனைவியை கொன்று கணவர் ரெயில் முன் பாய்ந்து தற்கொலை!!