நவம்பர் 10 ஸ்கைப்புக்கு மூடுவிழா?

Read Time:2 Minute, 12 Second

1250386105skypeமைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தி இணையதள பயனாளிகளின் பெரும் வரவேற்பை பெற்ற”ஸ்கைப்´ வசதியை இந்தியாவில் நவம்பர் 10ஆம் திகதி முதல் நிறுத்த உள்ளதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அதிரடியாக அறிவித்துள்ளது.

உள்ளூர் செல்போன்களுக்கு இனி நவம்பர் 10 முதல் ஸ்கைப் மூலம் பேச முடியாது. ஆனால் அதே நேரத்தில் வெளிநாட்டில் உள்ளவர்களுடன் பேசுவதற்கு தடை இருக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் உள்ள தொலைத்தொடர்பு நிறுவனங்கள் தங்களுடைய வருவாய் ஸ்கைப் வசதியால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக கொடுத்த புகாரின் அடிப்படையில் மைரோசாப்ட் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளது. மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் இந்த அறிவிப்பு ஸ்கைப் இந்திய பயனாளிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. இருப்பினும் இந்தியாவில் இருந்து வெளிநாடுகளுக்கும், வெளிநாட்டில் இருந்து இந்தியாவுக்கும் ஸ்கைப் மூலம் பேச தொடர்ந்து அனுமதித்துள்ளதால் பயனாளிகள் ஓரளவுக்கு ஆறுதல் அடைந்துள்ளனர்.

வீடியோவில் பேசும் வசதி கொண்ட ஸ்கைப், குறுகிய காலத்தில் இணையதளத்தை பயன்படுத்துபவர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இதனால் வீடியோகால்கள் மூலம் பலகோடி ரூபாய்கள் வருமானம் பெற்று வந்த முன்னணி நிறுவனங்கள் கடும் பாதிப்பு அடைந்ததாக கூறப்படும். ஸ்கைப்பின் இலவச சேவை நிறுத்தப்படுவதால் இந்திய மக்கள் உள்ளூரில் இனி இலவசமாக வீடியோகால்களை உபயோகிக்க முடியாது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பெல்ப்ஸ்சுக்கு 6 மாதம் தடை!!!
Next post 2 லட்சம் கோடி செலவில் கழிவறைகள்!!