சிகிச்சை வழங்கிய தாதியை தாக்கிய எபோலா!!

Read Time:2 Minute, 5 Second

1917351994nurseமேற்கு ஆப்பிரிக்க நாடுகளான கினியா, சியாரா லியோன், லைபீரியா, நைஜீரியாவில் ‘எபோலா’ என்ற உயிர்க் கொல்லி நோய் பரவி வருகிறது. இந்த நோய்க்கு இதுவரை 3,400 பேர் பலியாகி உள்ளனர். பல லட்சம் போர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் ஸ்பெயினை சேர்ந்த மத குருக்கள் மானுவேல் கார்சியா வியஜோ மற்றும் மினகல் பஜாரஸ் ஆகியோர் எபோலா நோய் தாக்கி சிகிச்சை பலனின்றி இறந்தனர்.

இவர்களில் மானுவேல் கார்சியா வியஜோவுக்கு சியாரா லோனிலும், மினகல் பஜாரஸ்க்கு லைபீரியாவிலும் எபோலா நோய் தாக்கியது. இவர்களுக்கு ஸ்பெயினில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அப்போது, அவர்களுக்கு தாதி ஒருவர் சிகிச்சை அளித்தார். அவருக்கு கடந்த வாரம் அவரும் கடுமையான காய்ச்சலால் அவதிப்பட்டார்.

எனவே பரிசோதித்து பார்த்ததில் அவருக்கு ‘எபோலா’ நோய் பாதித்து இருப்பது தெரியவந்தது. எனவே, அவர் மாட்ரிட் அருகேயுள்ள அல்கார்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது அவரது நிலை சீராக இருப்பதாக ஸ்பெயின் சுகாதார மந்திரி அனா மாரூடா தெரிவித்துள்ளார். தாமஸ் டன்கான் என்பவரும், லைபீரியாவில் எபோலா நோய் பாதித்து அமெரிக்காவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

எனவே, அமெரிக்கா வரும் அனைத்து விமானங்களிலும் பயணிகள் கடுமையாக பரிசோதிக்கப்படுவார்கள் என ஜனாதிபதி ஒபாமா தெரிவித்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சம்பளம் தராமல் இழுத்தடிப்பு: வேலைக்கார சிறுமிக்கு ரூ. 60 ஆயிரம் நஷ்டஈடு!!
Next post சமூக ஊடகங்களின் உதவியால் டெல்லியில் கடத்தப்பட்ட 3 வயது சிறுமி மீட்பு!!