மேற்கு வங்க ஆசிரியர் கொலை: குடும்பத்துடன் கொல்கத்தாவுக்கு தப்பி ஓடிய கள்ளக்காதலி!!

Read Time:3 Minute, 51 Second

db1d42da-bc7a-470b-af3b-39c61c70b50d_S_secvpfமேற்கு வங்காள மாநிலம் கொல்கத்தா முர்சிதாபாத் பகுதியை சேர்ந்தவர் சுதிப் பிஸ்வாஸ்(வயது 30). பி.ஏ. ஆங்கிலம் பட்டதாரியான இவர் குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி பகுதியில் செங்கல் சூளைகளில் வேலை பார்க்கும் தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு டியூசன் சொல்லிக் கொடுத்து வந்தார்.

இவர் கடந்த 23–ந் தேதி வீட்டில் ரத்த வெள்ளத்தில் மயங்கிக் கிடந்தார். ஆசாரிப் பள்ளம் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்ட இவர் 28–ந் தேதி இறந்து போனார். ஆரல் வாய்மொழி போலீசார் நடத்திய விசாரணையில் சுதிப் பிஸ்வாசை ஒரு கும்பல் தாக்கி கொலை செய்தது தெரிய வந்தது.

சுதிப் பிஸ்வாஸ் கொல்கத்தாவில் இருந்து திருமணமான இளம்பெண் ஒருவரை குடும்பத்தினருடன் வேலைக்காக இங்கு அழைத்து வந்துள்ளார்.

இதில் அந்த பெண்ணுடன் சுதிப்பிஸ்வாசுக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இதையறிந்த அந்த பெண் குடும்பத்தினர் இருவரையும் கண்டித்தனர். என்றாலும் இவர்கள் தொடர்பை நிறுத்தாமல் அடிக்கடி ரகசியமாக சுற்றித் திரிந்துள்ளனர்.

சம்பவத்தன்று இரவு சுதிப்பிஸ்வாசும், அந்த இளம் பெண்ணும் ரகசியமாக சந்தித்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்ணின் குடும்பத்தினர் சுதிப் பிஸ்வாசை விரட்டி விரட்டி தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சுதிப் பிஸ்வாஸ் வீட்டிற்கு ஓடி வந்து மயங்கி விழுந்துள்ளார்.

மறுநாள் சுதிப் பிஸ்வாஸ் டியூசனுக்கு செல்லாததால் சக ஆசிரியர்கள் அவரை தேடி வந்த போது அவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்து ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்துள்ளனர்.

ஆஸ்பத்திரியிலும் அந்த பெண் உடனிருந்து சுதிப் பிஸ்வாசை கவனித்து வந்துள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி சுதிப் பிஸ்வாஸ் இறந்ததும் அந்த பெண் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் தலைமறைவாகியது தெரிய வந்தது.

இதையடுத்து போலீசார் அந்த பெண் வேலை பார்த்த செங்கல் சூளைக்கு சென்று விசாரித்தனர். அப்போது அங்கு பணியாற்றும் ஏராளமான மேற்கு வங்க தொழிலாளர்கள் தசரா பண்டிகை கொண்டாட்டத்துக்காக மேற்கு வங்காளம் சென்றிருப்பது தெரிய வந்தது.

எனவே அந்த பெண்ணும் குடும்பத்துடன் கொல்லத்தாவுக்கு தப்பி ஓடியிருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். இதுகுறித்த தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். அந்த இளம்பெண் பிடிபட்டால் மட்டுமே ஆசிரியர் கொலைக்கான காரணம் மற்றும் கொலையாளிகள் பற்றிய விவரங்கள் தெரிய வரும் என்பதால் அவரை பிடிப்பதற்காக தனிப்படை போலீசார் கொல்கத்தா செல்ல திட்டமிட்டுள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post தாம்பரத்தில் முகமூடி கொள்ளை: வீட்டை உடைத்து கத்திமுனையில் நகை பறிப்பு!!
Next post மீண்டும் கருத்து முரண்பாடு – காதலா? மோதலா?