திருவண்ணாமலை மாவட்டத்தில் அனைத்து வீடுகளிலும் கழிப்பறை கட்டாயம்: கலெக்டர் வேண்டுகோள்!!

Read Time:3 Minute, 28 Second

1f7f100e-bfc5-41f9-9ad3-38d3f6ef4d6b_S_secvpfதிருவண்ணாமலை மாவட்டத்தில் கிராமப்புற மக்களின் திறந்தவெளி கழிப்பறை பழக்கத்தை இந்த நிதியாண்டிற்குள் முற்றிலுமாக ஒழித்து 860 ஊராட்சிகளிலும் உள்ள அனைத்து வீடுளிலும் சுகாதாரமான தனி நபர் கழிப்பறைகள் கட்டி பயன்படுத்த வேண்டும் என கலெக்டர் ஞானசேகரன் பேசினார்.

கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற ஊரக வளர்சச்சித் துறை, மகளிர் திட்டம், புதுவாழ்வு, கல்வித்துறை, சுகாதாரத்துறை, சமூக நலத்துறை அலுவலர்கள் கூட்டத்தில் தலைமை ஏற்ற கலெக்டர் கிராமப்புற பகுதிகளில் எல்லா வீடுகளிலும் கழிப்பறை கட்டுவதற்கும் அதனை பயன்படுத்துவதற்கும் ஏற்றவாறு கிராம மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த வழிப்புணர்வு இயக்கம் தொடர்ந்து நடத்தப்பட வேண்டும்.

கழிப்பறை கட்டுவதற்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டம் மற்றும் நிர்மல் பாரத் அபியான் திட்டங்களளின் மூலம் அரசு வழங்குகின்ற நிதி உதவி குறித்து கிராம மக்களுக்கு தெளிவாக எடுத்துரைக்க வேண்டும்.

சுய உதவிக்குழு உறுப்பினர்கள், ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி மன்ற தலைவர்கள் மற்றும் பள்ளி செல்லும் மாணவர்கள் ஆகியோர் வீடுகளில் முதலில் கழிப்பறை கட்டி பயன்படுத்துவங்கினால் மற்ற வீடுகளிலும் மக்கள் கழிப்பறை கட்ட முன்வருவார்கள் என்று கலெக்டர் தெரிவித்தார்.

மேலும் மாவட்டத்தில் சீரமைக்கப்பட்டுள்ள 857 மகளிர் சுகாதார வளாகங்களையும் புதிதாக கட்டப்பட்ட 36 ஆண்கள் சுகாதார வளாகங்களையும் கிராம மக்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.

இதையொட்டி 25.9.2014 முதல் 23.10.2014 வரை சகாதார விழிப்புணர்வு மற்றும் கழிப்பறை கட்டுதல் குறித்து பேரணிகள், துண்டு பிரசுரங்கள், விளம்பர பலகைகள், கலை நிகழ்ச்சிகள் போன்றவை மாவட்ட அளவில் நடத்தி மக்களுக்கு இச்செய்தி சென்றடைய உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். காந்தி ஜெயந்தி அன்று நடைபெறும் கிராம சபை கூட்டதில் தேசிய சுகாதார விழிப்புணர்வு குறித்து விவாதிக்கவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். கலெக்டர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் திட்ட இயக்குநர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, உதவி இயக்நர், உதவி திட்ட அலுவலர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் பிற துறை அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post வத்தலக்குண்டுவில் கர்ப்பிணி மனைவியை கொன்ற கணவன் கைது!!
Next post பஞ்சாயத்து தலைவருடன் தங்கியிருந்த கணவரை கடத்த முயன்ற மனைவி உள்பட 5 பேர் கைது!!