திருச்சி ஆஸ்பத்திரியில் வெறிநாய் கடித்த வாலிபர் சாவு!!

Read Time:4 Minute, 11 Second

d4329bad-ccac-4f32-88e2-947c52efdc74_S_secvpfமேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்தவர் சலீம்(வயது 35). இவர் கரூரில் குடும்பத்துடன் தங்கி கொசுவலை வியாபாரம் செய்து வந்தார். கடந்த 3 மாதத்திற்கு சலீமை வெறிநாய் கடித்தது. இதனால் நோய் கிருமிகள் சலீமின் உடலுக்குள் புகுந்தது. அவருக்கு தீவிர சிகிச்சை அளித்தும் குணமாகவில்லை.

இதை தொடர்ந்து தீவிர சிகிச்சைக்காக சலீம் திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார். நேற்று மாலை 4 மணிக்கு சலீமிற்கு வெறி நாய்கடி பாதிப்பு தீவிரமடைந்தது. அவர் உடலில் துணியின்றி நிர்வாணமாக ஓடினார். நாய் குரைப்பது போல சத்தம் போட்டுக்கொண்டு நோயாளிகள் படுத்திருந்த வார்டுக்கு சென்றார்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த இலுப்பூர் விலாப்பட்டியை சேர்ந்த அர்ஜூணன் என்பவர் கால் தொடையில் சலீம் கடித்தார். மற்ற நோயாளிகளையும் கடிக்க பாய்ந்தார். இதனால் ஆஸ்பத்திரியில் நோயாளிகள் நர்சுகள், டாக்டர்கள் அலறியடித்து ஓடினர்.

உடனே ஆஸ்பத்திரி பாதுகாவலர்கள் மற்றும் போலீசார் சலீமை மடக்கி பிடித்தனர். அவர்கள் கைகளை கட்டி தனி அறையில் போட்டு அடைத்தனர். மற்ற நோயாளிகளை மாடி அறைக்கு மாற்றினர்.

இரவு முழுவதும் சலீம் தனி அறையில் நாயை போல சுருண்டு படுத்திருந்தார். அவர் எந்த நேரமும் வெறிநாய் கடிவிஷம் முற்றி இறக்கலாம் என்று கூறப்பட்டது. இந்த நிலையில் இன்று காலை 11 மணிக்கு சலீம் பரிதாபமாக இறந்து போனார்.

சலீமின் உடலில் உள்ள வெறிநாய் நோய் கிருமிகள் மற்றவர்களுக்கு பரவும் அபாயம் இருப்பதால் அவரது உடலை பாலித்தீன் பை மூலம் கட்டி எடுத்து சென்று பாதுகாப்புடன் எரிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. சலீம் இறந்த தகவலை கேட்டு மனைவி மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

வெறிநாய் கடித்ததும் சரியான நேரத்தில் சிகிச்சை பெறாததால் சலீமுக்கு 3 மாதத்தில் ராபிஸ் நோய் கிருமி உடல் முழுவதும் பரவி மூளையை தாக்கி இறப்பை ஏற்படுத்தி விட்டது.

கடந்த சில மாதத்திற்கு முன்பு சோமரசம் பேட்டையில் ஒரு வாலிபர் வெறி நாய் கடித்து திருச்சி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இறந்தார். அவர் தனக்கு நாய் கடித்ததை பெற்றோரிடம் உடனே தெரிவிக்காததால் பரிதாபமாக இறக்கும் நிலை ஏற்பட்டது. இந்த நிலையில் 2–வதாக வடமாநில வாலிபர் இறந்துள்ளார்.

திருச்சி, கரூரில் சாலையில் திரியும் நாய்களை பிடித்து அப்புறப்படுத்த வேண்டும். வெறிநாய்களை ஒழிக்க வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கிறார்கள். திருச்சியில் உறையூர், பாலக்கரை, கே.கே.நகர், சுப்பிரமணியபுரம், கருமண்டபம், தில்லை நகர், மலைக்கோட்டை உள்பட பல பகுதிகளில் அதிகாலை ரோட்டில் திரியும் தெரு நாய்களுக்கு பயந்து தினமும் வாக்கிங் செல்பவர்கள் பீதியில் செல்லும் நிலை நிலவுகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மண்டேலா நகரில் காதல் ஜோடியை மிரட்டி செல்போன் பறிப்பு: 3 பேர் கைது!!
Next post விருதுநகரில் மனநிலை பாதித்த இளம்பெண்ணை கற்பழித்தவர் அடித்துக்கொலை!!