சுஜிபால திருமணத்தின் உண்மை பொய் திடுக்கிடும் தகவல்கள்..!!
அய்யா வழி, முத்துக்கு முத்தாக, கோரிப்பாளையம் உள்ளிட்ட படங்களில்நடித்தவர் சுஜிபாலா. இவர் காஞ்சீபுரத்தை சேர்ந்த பி.ரவிக்குமார் இயக்கிதயாரித்து கதாநாயகனாக நடிக்கும் உண்மை என்ற படத்திலும் நாயகியாக நடித்தார்.படப்பிடிப்பில் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்பட்டது. ஆனால் சிலவாரங்களிலேயே இருவருக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து விட்டனர்.
சுஜிபாலா தன்னை திருமணம் செய்து ஏமாற்றி விட்டதாகவும் அவருக்கு வீடு, நிலங்கள் வாங்கி கொடுத்தேன் என்றும் ரவிக் குமார் குற்றம் சாட்டினார்.சுஜிபாலா இதனை மறுத்தார். ரவிக்குமாருடன் தனக்கு திருமணம் நடக்கவில்லைஎன்றும் சொத்துக்கள் கொடுத்ததாக பொய் சொல்கிறார் என்றும் தன் மீது ஆசிட்வீசுவேன் என்று மிரட்டுகிறார் என்றும் கூறினார். போலீசிலும் ரவிக்குமார்மீது புகார் அளித்தார். போலீசார் விசாரணை நடத்தினர். அதன் பிறகு இந்தபிரச்சினை அடங்கியது.
இந்த நிலையில் சென்னையில் நேற்று நடந்த ‘உண்மை’ படத்தின் டிரெய்லர்வெளியீட்டு விழாவில் பங்கேற்ற டைரக்டர் ரவிக்குமாரிடம் உங்களுக்கும்சுஜிபாலாவுக்கும் திருமணம் நடந்தது உண்மையா இல்லையா என்று நிருபர்கள்கேட்டனர். இதற்கு பதில் அளித்து ரவிக்குமார் கூறியதாவது: எனக்கும் சுஜிபாலாவுக்கும் திருமணம் நடந்தது உண்மை. அதற்கான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது.
உண்மை படத்தில் சுஜிபாலாவை நாயகியாக நடிக்க வைத்தேன். முதலில்நடிகையாகத்தான் எனக்கு அறிமுகமானார். பிறகு நெருங்கி பழகி காதலித்தோம்.திருமணமும் செய்து கொண்டோம்.
சுஜிபாலாவுக்கு வீடு வாங்கி கொடுத்தேன். தோட்டமும் வாங்கி கொடுத்தேன். அதன்பிறகு மாறிவிட்டார். மனைவியாக இருந்து என்னை ஏமாற்றினார். நான் வாங்கிகொடுத்த வீடு, வாசல் சொத்துக்களையெல்லாம் எடுத்துக் கொண்டார். அடித்துதுன்புறுத்துவதாகவும் ஆசிட் வீசுவேன் என்று மிரட்டுவதாகவும் போலீசில்புகார் அளித்தார். அதெல்லாம் பொய். அவரை நான் மிரட்ட வில்லை.
காதல், கல்யாணம் மூலம் நிறைய அனுபவங்கள் கிடைத்துள்ளது. அடுத்து என் திருமணஅனுபவங்களை வைத்து லவ் பண்ணலாமா வேண்டாமா என்ற படத்தை எடுக்க இருக்கிறேன்.
உண்மை படம் ஊழல் பற்றிய கதை. விறுவிறுப்பான ஆக்ஷனும் இருக்கும். இதில் நான்போலீஸ் அதிகாரியாகவும், திருநங்கை மற்றும் மன நலம் பாதித்த இளைஞன் எனமூன்று கேரக்டரில் நடிக்கிறேன். ராதாரவி, தோட்டா சீனிவாசராவ், ஷகிலா, போன்றோரும் உள்ளனர். அன்பு ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஸ்ரீராம்இசையமைத்துள்ளார். விரைவில் ரிலீசாக உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.
பின்னர் சுஜிபாலாவை திருமணம் செய்து கொண்டதற்கான ஆதாரங்களான படங்களையும் வெளியிட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating