டெல்லியில் கடத்தல் நாடகமாடி குடும்பத்தாரிடம் ரூ.2 லட்சம் பறித்த வாலிபர் கைது!!

Read Time:3 Minute, 42 Second

0bdb3fc2-6c7c-496e-af04-295dd7da265c_S_secvpfடெல்லியின் க்ரிஷன் விகார் பகுதியைச் சேர்ந்தவர், சாகர் குமார்(22). தனியார் மருந்து கம்பெனி ஒன்றில் விற்பனை பிரதிநிதியாக பணியாற்றிவந்த இவர், உத்தரப்பிரதேசம் மாநிலம், மோடி நகரில் வசிக்கும் தனது தங்கையை காணச் சென்றார்.

மறுநாளே டெல்லி திரும்பி விடுவதாக கூறிச் சென்ற சாகர் குமார் வீடு வந்து சேரவில்லை. அவரை தொடர்பு கொள்ள குடும்பத்தினர் முயற்சித்தபோது 3 செல்போன்களும் அணைக்கப்படிருந்தது.

இரு நாட்களுக்குப் பின்னர், செல்போன் மூலம் தனது குடும்பத்தை தொடர்பு கொண்ட சாகர் குமார், தன்னை நான்கைந்து பேர் கண்ணைக் கட்டி கடத்திவந்து ஒரு தனியறையில் அடைத்துவைத்து சிதரவதை செய்வதாக தெரிவித்தார்.

தனது செல்போன்கள் மற்றும் வங்கி ஏ.டி.எம். கார்ட்களை பறித்து வைத்துக் கொண்டதாகவும், இரண்டு லட்சம் ரூபாயை தந்தால் விடுவித்து விடுவோம். இல்லையென்றால் கொன்று விடுவோம் என்று கடத்தல்காரர்கள் கூறுவதால், தனது வங்கிக் கணக்கில் உடனடியாக இரண்டு லட்சம் ரூபாயை போடும்படி அழுதுக் கொண்டே கூறினார்.

பதறிப்போன அவரது குடும்பத்தினர் சாகர் குமாரின் வங்கிக் கணக்கில் இரண்டு லட்சம் ரூபாயை கடந்த 5-ம் தேதி டெபாசிட் செய்தனர். மறுநாள் 6-ம் தேதியன்று குடும்பத்தினருக்கு மீண்டும் போன் செய்த சாகர் குமார், தனது ஏ.டி.எம். கார்ட்டின் மூலம் பணத்தை எடுத்துக் கொண்ட கடத்தல்காரர்கள் தன்னை விடுவிக்க முடியாது என்று கூறிவிட்டதாகவும், எதிர்த்துப் பேசிய தனது கை விரலை வெட்டி விட்டதாகவும் கூறி அழுதுள்ளார்.

உடனடியாக அவரது சகோதரர் இந்த ஆள்கடத்தல் தொடர்பாக டெல்லி போலீசில் புகார் அளித்தார். அவர்கள் நடத்திவந்த விசாரணையில் கடத்தல் நாடகம் ஆடிய சாகர் குமார், உத்தராக்கண்ட் மாநிலத்தில் உள்ள ஹரித்வார் நகரில் நடமாடிக் கொண்டிருப்பது அவரது செல்போன் சிக்னலின் மூலமாக தெரியவந்தது.

இதனையடுத்து, ஹரித்வாரில் உள்ள லாட்ஜ்கள், ஏ.டி.எம்.மையங்கள் ஆகியவற்றை டெல்லி போலீசார் தீவிரமாக கண்காணித்து வந்தனர். இந்த கண்காணிப்பின்போது போலீசாரின் கண்களில் சிக்கிக் கொண்ட சாகர் குமாரை கைது செய்து விசாரித்தபோது, குடுமபத்தாரை ஏமாற்றி பணம் பறித்து, ஜாலியாக செலவு செய்வதற்காக இப்படி நாடகமாடியதாக ஒப்புக் கொண்டார்.

ஜாலியாக செலவு செய்ததுபோக, அவரிடம் மீதமிருந்த தொகை ஒரு லட்சத்து 15 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post ஐயோ! நான் விபச்சாரி அல்ல! அலரும் நடிகை!!
Next post நடிகையுடன் இருந்த தொழிலதிபர் யார்? கிளரும் மகளிர் அமைப்பு!!