72 ஆண்டுகளாக சேர்ந்து வாழ்ந்த லெஸ்பியன் ஜோடிக்கு 90 வயதில் நடந்த திருமணம்!!

Read Time:2 Minute, 13 Second

8b4f389f-ab57-416f-9197-29c2b3bae96b_S_secvpfஅமெரிக்காவின் ஐயோவா மாநிலத்தில் 72 ஆண்டுகளாக லெஸ்பியன் ஜோடிகளாக (பெண் ஓரினச் சேர்க்கை பிரியர்கள்) சேர்ந்து வாழ்ந்த தம்பதியர் கடந்த சனிக்கிழமை சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர்.

விவியன் பொயாக்(91) மற்றும் அலிஸ் நோனை ட்யுப்ஸ்(90) இணையருக்கு டேவன்போர்ட்டில் உள்ள கிருஸ்துவ தேவாலயத்தில் பெண் மதகுரு ஒருவர் இந்த திருமணத்தை செய்து வைத்து ஆசி வழங்கினார்.

ஐயோவா மாநிலத்தில் உள்ள ஏல்டவுன் பகுதியில் தங்களது இளமை ததும்பும் 18-ம் வயதில் சந்தித்துக் கொண்ட விவியன் பொயாக்கும் அலிஸ் நோனை ட்யுப்ஸும் ஒருவர் மீது ஒருவர் ஈர்ப்பு கொண்டு அன்று முதல் ஒன்றாக சேர்ந்து வாழத் தொடங்கியுள்ளனர்.

பின்னர், 1947-ம் ஆண்டுவாக்கில் டேவன்போர்ட் பகுதிக்கு குடிபெயர்ந்து, அங்குள்ள பள்ளியொன்றில் பொயாக் ஆசிரியையாகவும், ட்யுப்ஸ் தனியார் நிறுவன ஊழியராகவும் பணியாற்றி வந்துள்ளனர்.

அமெரிக்காவில் உள்ள 50 மாநிலங்கள், கனடா மற்றும் பிரிட்டைன் நாடுகளில் உள்ள பல பகுதிகளை உல்லாசப் பறவைகளாக சுற்றிப் பார்த்து, தங்களது 90 வயதை கடந்த நிலையில் 72 ஆண்டுகள் இணைபிரியாமல் சேர்ந்து வாழ்ந்த இவர்கள் தற்போது திருமணம் செய்துக் கொண்டுள்ளனர்.

இதற்கு மேல் திருமணமா? என்ற கேள்விக்கு சக்கர நாற்காலிகளில் அமர்ந்தபடி ‘வாழ்வின் புதிய அத்தியாத்தை தொடங்க இன்னும் காலம் மிச்சம் உள்ளது’ என்று இந்த புதுமண தம்பதியர் சிரித்தபடி கூறுகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விபசாரத்தில் ஈடுபடுவதை ஏற்கமுடியாது!!
Next post வரதட்சணைக்காக மருமகளை குளியலறையில் 3 ஆண்டுகள் அடைத்து வைத்து சித்ரவதை செய்த குடும்பம்!!