காசா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நுழைந்தது

Read Time:1 Minute, 14 Second

isrel.map.jpgபாலஸ்தீனம்-இஸ்ரேல் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து காசா பகுதியில் இருந்து இஸ்ரேல் தனது ராணுவத்தை வாபஸ் பெற்றது. அதன் பிறகு நடைபெற்ற தேர்தலில் ஹமாஸ் இயக்கம் வெற்றி பெற்றதை அடுத்து மீண்டும் அங்கு மோதல்கள் மூண்டுள்ளது. ராக்கெட்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். காசா பகுதி மீது சமீப காலமாக இஸ்ரேல் வீசிய ராக்கெட்டு தாக்குதலில் தீவிரவாதிகள் உள்பட 20-க்கும் மேற்பட்டவர்கள் பலியானார்கள். இந்த நிலையில் நேற்று இஸ்ரேல் ராணுவத்தினர் தெற்கு காசா பகுதிக்குள் நுழைந்து பாலஸ்தீனியர்களின் வீடுகளில் சோதனை போட்டனர். தீவிரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவரின் 2 மகன்களை ராணுவத்தினர் பிடித்து சென்றனர். ஆனால் இது பற்றி இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் கருத்து கூற மறுத்து விட்டனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %
Previous post 158 கிலோ எடையுள்ள திருமண உடை
Next post 3 முறை சாம்பியனான இத்தாலி கால் இறுதிக்கு தகுதி பெறுமா?- ஆஸ்திரேலியாவுடன் நாளை மோதல்