மனைவியை எரித்துக்கொன்ற வாலிபருக்கு ஆயுள் தண்டனை: கோர்ட்டு தீர்ப்பு!!

Read Time:2 Minute, 20 Second

cd196302-4cca-481b-a179-db981c14d01b_S_secvpfசென்னை துரைப்பாக்கம் கண்ணகி நகரைச் சேர்ந்தவர் அருள்மணி(வயது 29). இவருக்கும், சென்னை சேத்துப்பட்டைச் சேர்ந்த நந்தினி என்ற ராசாத்தி என்பவருக்கும் கடந்த 2007-ம் ஆண்டு சேத்துப்பட்டில் உள்ள கருமாரியம்மன் கோவிலில் திருமணம் நடந்தது. திருமணத்துக்கு பின்னர் நந்தினி, துரைப்பாக்கம் பகுதியில் உள்ள ஒரு ஏற்றுமதி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இது அருள்மணிக்கு பிடிக்கவில்லை. இதனால் அவர் தினமும் இரவில் குடித்துவிட்டு வந்து மனைவி நந்தினியிடம் தகராறு செய்து வந்தார்.

கடந்த 8-4-2008 அன்று வழக்கம்போல கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த அருள்மணி, வீட்டில் இருந்த மண்எண்ணெயை நந்தினி மீது ஊற்றி தீ வைத்து விட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் படுகாயம் அடைந்த நந்தினியை அக்கம் பக்கத்தினர் மீட்டு சென்னை கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நந்தினி பரிதாபமாக உயிரிழந்தார்.

முன்னதாக அவர் போலீசாரிடம் மரண வாக்குமூலம் அளித்தார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில் துரைப்பாக்கம் போலீசார், அருள்மணி மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். இது தொடர்பான வழக்கு செங்கல்பட்டு கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஹேமலதா, நேற்று தீர்ப்பு கூறினார். அதில், கொலையான நந்தினியின் கணவன் அருள்மணிக்கு ஆயுள்தண்டனை விதித்து தீர்ப்பளித்தார். அரசு தரப்பில் வக்கீல் சிவபெருமான் ஆஜரானார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post திண்டுக்கல்: மைனர் பெண்கள் திருமணத்தை தடுத்து நிறுத்திய அதிகாரிகள்!!
Next post மதிப்பெண் குறைந்ததால் தற்கொலைக்கு முயன்ற 2 மாணவர்கள்!!