சார்ஜ் ஏறி கொண்டு இருந்த ஐ-போனை படுக்கையில் வைத்து தூங்கிய இளம்பெண் காயம்!!
இங்கிலாந்து நாட்டை சேர்ந்த இளம்பெண் டியோனே பாக்ஸ்டர்(வயது 24). டியோனே மிகவும் ஐ-போன் பிரியர் ஆவார். எப்போதும் ஐ-போனை தன்னுடன் வைத்துக் கொள்வார். சம்பவத்தன்று இரவு தனது ஐ-போனை சார்ஜ் ஏற்றியுள்ளார். படுக்கையில் சார்ஜ் ஏறி கொண்டு இருந்த செல்போன் மீது தெரியாமால் படுத்து தூங்கியுள்ளார். அப்போது அவரது போன் கடும் வெப்பம் அடைந்துள்ளது. இதனால் அவரது மார்பில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அவருக்கு உயிர் மீது அச்சம் ஏற்பட்டுள்ளது. காயம் அடைந்த பெண் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
இது தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண் செய்தியாளர்களிடம் பேசுகையில் “நான் தூங்கியபோது போனில் ஏற்பட்ட கடும் வெப்பம் காரணமாக எனது மார்பகத்தில் காயம் ஏற்பட்டுள்ளது. நான் என்னுடையை போனை தூக்கியபோது அது மிகவும் வெப்பமாக இருந்தது. என்னால் அதனை தொடக் கூட முடியவில்லை.” என்று கூறியுள்ளார். அதிகமாக வெப்பம் ஆகும் ஐ-போனால் பாதிக்கப்படுவது இது முதல் முறையல்ல. இரண்டு வாரங்களுக்கு முன்னதாக ஐ-போனை வைத்து தூங்கிய 18 வயது ஜாக் பார்கெர் என்ற வாலிபர் கையில் காயம் ஏற்பட்டது. பிப்ரவரியில் பள்ளி மாணவியின் பாக்கெட்டில் இருந்த ஐ-போன் எரிந்ததில் அவர் காயம் அடைந்தார். 14 வயது சிறுமி வைத்திருந்த ஐ-போன் எரிந்ததில் அவரது தொடைப் பகுதியில் காயம் ஏற்பட்டது. தற்போது ஐ-போன் வெப்பத்தால் காயம் அடைந்த பெண் தனது இரண்டாவது குழந்தைக்கு தாய்பால் கொடுக்க முடியாது என்று மிகவும் அச்சத்தில் உள்ளார்.
சார்ஜ் ஏறும்போது அதில் பேச வேண்டாம், கேம் விளையாட வேண்டாம் என்று பல்வேறு விழிப்புணர்வு கொண்டுவரப்பட்டாலும், அதனை மீறுபவர்கள் உள்ளனர். யாரும் தூங்கும் போது தங்கள் அருகே செல்போன் வைக்க வேண்டாம். குழந்தைகள் கைகளில் கொடுப்பதும் தவறு. இதுபோன்ற தவறுகளால் பொதுமக்கள் பரவலாகவே பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதனை தவிர்க்க வேண்டும்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating