கணவனைத் தாக்கியவர்களை நையப்புடைத்த பெண்ணுக்கு அரசின் பரிசு!!

Read Time:1 Minute, 35 Second

159076010Untitled-1இந்தியாவின் உத்தரப்பிரதேசம் மாநிலம், மீரட் அருகேயுள்ள ஷதாப்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வரும் மமதா யாதவ், கடந்த செவ்வாய்க்கிழமை தனது கணவருடன் கச்சேர்புல் சாலை வழியாக இருசக்கர வாகனத்தில் சென்றுக் கொண்டிருந்தார்.

அப்போது, பின்னால் வந்த ஒரு கார் அந்த வாகனத்தை இடித்து தள்ளியதில் காரில் வந்த இருவருக்கும் மமதாவின் கணவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் இருதரப்பினருக்கும் கைகலப்பு ஏற்பட்டதில் காரில் வந்த நபர்கள் மமதாவின் கணவரை ஆவேசமாக தாக்கத் தொடங்கினர்.

அவர்களின் உதவிக்கு யாரும் வராததால், இந்த சண்டையை தடுக்க முயன்ற மமதாவையும் அவர்கள் சரமாரியாக தாக்கினர்.

பொறுமையிழந்த மமதா, கோதாவில் இறங்கி அவர்கள் இருவரையும் நைய்யப் புடைத்து, ஓட விட்டார்.

இது பற்றிய தகவல் அறிந்ததும் அவரது வீரத்தை பாராட்டி மாநில அரசு வழங்கிய பரிசுத்தொகையான ஒரு இலட்சம் ரூபாய்க்கான காசோலையை மாவட்ட பொலிஸ் சூப்பிரண்ட் நேற்று மமதாவின் வீட்டுக்கு நேரில் சென்று ஒப்படைத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post பள்ளியில் ஆடையை அவிழ்த்து தண்டித்ததால் 12 வயது மாணவி தற்கொலை!!
Next post விஜயவாடாவில் மாணவிகளை நிர்வாண படம் எடுத்த கும்பல் கைது!!