அஞ்சானில் மட்டும் ஏன் இவ்வளவு கிளாமர்? சமந்தா பதில்!!

Read Time:1 Minute, 41 Second

Untitled-129லிங்குசாமி இயக்கத்தில் சூர்யா, சமந்தா நடித்துள்ள படம், ‘அஞ்சான்’. இதில் சமந்தா கிளாமராக நடித்துள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது:

கிளாமராக நடிக்க மாட்டேன் என்று எப்போதும் சொன்னதில்லை. இந்தக் கதைக்கு ஏற்ப அப்படி நடித்துள்ளேன். அதுமட்டுமன்றி என்னாலும் இப்படி நடிக்க முடியும் என்று நிரூபிக்க வேண்டும் என்பதாலும் கொஞ்சம் கிளாமராக நடித்துள்ளேன்.

இதில் சூர்யாவுடன் நடித்தது வித்தியாசமான அனுபவமாக இருந்தது. பெரிய நடிகராக இருந்தாலும் அந்த பந்தா ஏதுமின்றி எளிமையாக நடந்துகொண்டார். ஒரு பாடல் காட்சியில் எனது நடன அசைவு சரியாக வரவில்லை. பல முறை முயன்றும் சரியாக வரவில்லை. அப்போது சூர்யா கொடுத்த ஒத்துழைப்பும் உதவியும் மறக்க முடியாதது.

தமிழில் அறிமுகமானாலும் தெலுங்கு சினிமாதான் எனக்கு பெரிய இடத்தைக் கொடுத்தது. தமிழ், தெலுங்கில் தொடர்ந்து நல்ல படங்களில் நடிக்க ஆசை. பிரியங்கா சோப்ரா நடித்துள்ள ‘மேரிகோம்’ மாதிரியான ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள படங்களில் நடிக்க ஆசை.இவ்வாறு சமந்தா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி 1 வயது குழந்தை பலி!!
Next post புதுவையில் சினிமா நடிகர் மனைவி திடீர் மாயம்!!