இந்தியாவில் தூக்கு மேடைக்கு போகும் முதல் பெண்கள்!!

Read Time:2 Minute, 5 Second

cafd09f5-d4eb-4488-8e11-883de3900c22_S_secvpfகுழந்தைகளைக் கடத்தி கொலை செய்த வழக்கில் தூக்குத் தண்டனை பெற்ற மகாராஷ்டிர மாநில சகோதரிகள் இரண்டு பேர் விரைவில் தூக்கு மேடைக்கு செல்ல உள்ளனர். இவர்களின் தண்டனை நிறைவேற்றப்பட்டால், நாட்டிலேயே தூக்கிலிடப்படும் முதல் பெண்கள் இவர்களாக இருக்கலாம்.

மகாராஷ்டிர மாநிலம் கோல்காபூரைச் சேர்ந்த ரேணுகா மற்றும் அவரது சகோதரி சீமா ஆகிய இருவரும் குழந்தைகளைக் கடத்தி பிச்சையெடுக்க வைத்து பணம் சம்பாதித்துள்ளனர். பிச்சையெடுக்க மறுக்கும் குழந்தைகளை ஈவு இரக்கமின்றி கொடூரமாக கொலை செய்துள்ளனர்.

மொத்தம் 13 குழந்தைகளைக் கடத்திய இவர்கள், அவர்களில் 9 குழந்தைகளைக் கொன்றுள்ளனர். இவர்கள் செய்த கொலை மற்றும் கடத்தல் நிரூபிக்கப்பட்டதையடுத்து 2001ம் ஆண்டு இவர்களுக்கு தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டது. இவர்களின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி கடந்த மாதம் நிராகரித்துள்ள நிலையில், குறிப்பிட்ட காலத்திற்குள் அவர்களின் தண்டனை நிறைவேற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நாடு சுதந்திரம் பெற்றபிறகு 52 பேரின் தூக்குத் தண்டனை நிறைவேற்றப்பட்டிருப்பதாக அரசு புள்ளி விவரம் கூறுகிறது. இதில் எந்த ஒரு பெண்ணையும் தூக்கிலிட்டதாக ஆவணங்கள் இல்லை. எனவே, முதன் முதலில் தூக்கு மேடை ஏறும் பெண்கள் இந்த மகாராஷ்டிர சகோதரிகளாகத்தான் இருப்பார்கள்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post 12 வயது சிறுமியை துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்திய 75 வயது தாத்தா கைது!!
Next post தாராபுரத்தில் பெண்ணை கற்பழித்து கொன்று காட்டுக்குள் பிணம் வீச்சு!!