சின்னச் சின்ன தொடுதல்கள் காதல் உணர்வுகளை தூண்டும்!!
ஆணோ அல்லது பெண்ணோ, பேசுவதை விட தொடுவதுதான் அவர்களுக்கு உணர்ச்சிகளைத் தூண்டுவிக்க உதவுகிறதாம். காதல் மொழியை எவ்வளவுதான் பேசினாலும் கிளர்ச்சி பிளஸ் உணர்ச்சி என்பது மிக மிக மெதுவாகவே தூண்டப்படுகிறதாம். அதேசமயம், லேசான ஒரு தொடுதல் பல ஆயிரம் காதல் உணர்வுகளை ஒரு சேரத் தருகிறதாம். மேலும் தொடுதல் மூலம் உணர்வுகள் அதிகரித்து, உறவுகளும் வலுப்பட உதவுகிறதாம்.
இதுகுறித்து ஸ்வீடனில் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், உங்களது ஆண் நண்பர்களையோ அல்லது பெண் தோழிகளையோ உரிய இடத்தில் தொடுவதன் மூலம் நீங்கள் நினைப்பதை அடைய முடியும். அவர்களுக்கு உணர்ச்சிகள் விரைவாக தூண்டப்படும். மேலும் உங்களின் உறவுகளும் வலுப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எங்கெங்கு தொட்டால் என்னென உணர்வுகள் வரும் என்பதையும் இவர்கள் தெரிவித்துள்ளனர். உதாரணத்திற்கு காதலனோ அல்லது காதலியோ பதட்டம் அல்லது டென்ஷனாக இருக்கிறார்கள் என்றால், அவர்களின் காது மடல்களை வருடலாம். உங்களது ஆள்காட்டி மற்றும் பெருவிரலால் வருடுவது நல்ல ரிசல்ட் கொடுக்குமாம். லேசாக நாவால் வருடுவது, வலிக்காமல் கடிப்பது போன்றவையும் இதில் அடங்கும்.
காது மடல்கள் மென்மையான, உணர்ச்சிகளை விரைந்து தூண்டக்கூடிய நரம்புகளால் ஆனது என்பதால் காது மடல்களை லேசாக வருடினாலே மனம் அமைதியைடயும், கிளர்ச்சி அடையும் என்பது குறிப்பிடத்தக்கது. உறவுகளின்போதும் கூட இதுபோன்ற காது மடல் மசாஜ் நல்ல பலனைத் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல காதுகளுக்கு அருகில் மென்மையாக முனுமுனுப்பதும், கிசுகிசுப்பதும் கூட உடனடி பலனைத் தருமாம். குறிப்பாக ரொமான்டிக்காக பேசுவது இன்ஸ்டன்ட் பலன் தருமாம். இப்படிப் பேசுவதன் மூலம் நமது மூச்சுக்காற்று, காதுகளை உரசுகிறது. அந்தத் தொடுதலும் சுகம் தரும் என்கிறது இந்த ஆய்வு.
அதேபோல காதலன் அல்லது காதலியுடன் பேசுவதாக இருந்தால் பக்கத்தில் உட்கார்ந்து பேசாமல் மடியில் அமர்ந்தபடி பேசலாமாம். இது இருவருக்குள்ளும் கை விளையாடல்களை தானாகவே ஊக்குவிக்குமாம். இதுவும் உணர்ச்சிவசப்படுதலை தூண்டுவிக்கும் ஒரு தொடுதல் நடவடிக்கை என்கிறது ஆய்வு.
இப்படி சின்னச் சின்ன தொடுதல்கள் மூலம் காதல் உணர்வுகள் தூண்டப்பட்டு இருவருக்குள்ளும் உறவுகள் வலுப்படும், காதல் ஆழமாகும் என்று முடிக்கிறது அந்த ஸ்வீடன் நாட்டு ஆய்வு.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating