என்ன கல்யாணமா..? சொல்லவே இல்ல…!!

Read Time:2 Minute, 4 Second

thriஅஜீத்தின் 55–வது படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார் திரிஷா. தொடர்ந்து ஜெயம் ரவி ஜோடியாகவும் நடிக்கிறார். தெலுங்கு படங்களும் கைவசம் உள்ளது.

இந்த நிலையில் திரிஷாவுக்கு விரைவில் திருமணம் நடக்கப் போவதாக செய்திகள் வெளியாயின. அவருக்கு குடும்பத்தினர் மாப்பிள்ளை பார்ப்பதாகவும் கூறப்பட்டது.

இதற்கு பதில் அளித்து திரிஷா கூறியதாவது:– நான் திருமணம் செய்து கொள்ளப் போவதாக அடிக்கடி செய்திகள் வருகிறது. இதில் உண்மை இல்லை. திருமணம் பற்றி இன்னும் முடிவு செய்ய வில்லை. திருமணம் செய்து கொள்ள எப்போது விரும்புகிறேனோ அப்போது அதை உடனடியாக ரசிகர்களுக்கு தெரிவிப்பேன்.

தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகர்களுடன் நடித்து விட்டேன். ரஜினியுடன் மட்டும் நடிக்கவில்லை. அது நிறைவேறினால் மகிழ்ச்சி அடைவேன்.

இந்தி படங்களில் நடிப்பது கஷ்டமாக உள்ளது. காஜல்அகர்வால், தமன்னா உள்ளிட்டோர் மும்பையில் இருந்து வந்ததால் அவர்களுக்கு எளிதாக இருக்கிறது. இந்தி படத்தில் நடிக்கும் போது நிறைய நாட்கள் அங்கேயே தங்க வேண்டி இருக்கிறது.

தமிழில் தயாராகும் குயின் படத்தில் நான் நடிக்கப் போவதாக கூறப்படுவது உண்மையல்ல. அதில் நடிக்க யாரும் என்னை அணுகவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள கதையம்சம் உள்ள படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். இவ்வாறு திரிஷா கூறினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மீரட் ஆசிரியை கற்பழிப்பு விவகாரம்: உ.பி. அரசிடம் விளக்கம் கேட்கும் மத்திய உள்துறை அமைச்சகம்!!
Next post 15 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகம்: பொகவந்தலாவையில் சம்பவம்!!