பெண்கள் பொது இடத்தில் சத்தமாக சிரிக்கக்கூடாது: துருக்கி அமைச்சர் பேச்சால் சர்ச்சை!!
இஸ்லாமிய அடிப்படைகளைக் கொண்ட துருக்கியின் ஆளும்கட்சியான நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சியின் இணை நிறுவனரும், அந்நாட்டின் துணை பிரதமருமான புலென்ட் அரின்க் சமீபகாலமாக தங்கள் மக்களிடையே தார்மீக சரிவைக் காண்பதாக கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளார். கடந்த வாரம் பெண்கள் பொது இடங்களில் சத்தமாக சிரிக்கக்கூடாது என்று கூறிய இவரது கருத்து மத சார்பற்ற துருக்கியர்களால் பலமாக எதிர்க்கப்பட்டது. இதற்கான தங்களின் எதிர்ப்பைக் காட்டும்விதமாக பெண்கள் பலரும் வாய்விட்டு சிரிக்கும் தங்களின் புகைப்படங்களை இணையதளத்தில் வெளியிட்டிருந்தனர்.
இந்த புகைப்படங்கள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளதாக இன்று அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் அரின்க் குறிப்பிட்டார். பொதுவான நெறிமுறைகள் பற்றியே தான் குறிப்பிட்டதாகவும் கூறிய அரின்க் விடுமுறை நாட்களில் கணவர்கள் இல்லாமல் பெண்கள் வெளியே போகின்றனர் என்றும், சில பெண்கள் சுய கட்டுப்பாடு இல்லாமல் கம்பங்களில் ஆடுகின்றனர் என்றும் தெரிவித்தார். யார் வேண்டுமானாலும் இப்படி வாழலாம். அவர்களிடத்தில் நான் கோபப்படமுடியாது. ஆனால் உங்களைப் பார்த்து நான் பரிதாபப்படத்தான் முடியும் என்று அவர் தனது பேட்டியில் கூறினார்.
துருக்கியின் பிரபல கால்பந்து வீரரான கநேர் எர்கினின் மனைவி இதுபோன்ற ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இந்த நடனத்தின் மீதான தனது விருப்பத்தைத் தெரிவித்திருந்தார். இந்த செய்கையைத் தொடர்ந்தே அரின்க் தனது கருத்தினை வெளியிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது. ஆனால் இவரது பேட்டியைத் தொடர்ந்து ஏராளமானோர் தங்களின் செல்லப்பிராணிகள் கம்பத்தின் மீது நடனம் ஆடுவதுபோலும், கொடிகள் பறப்பதுபோலும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளனர்.
துருக்கியின் தற்போதைய பிரதமர் ரெசெப் தையிப் எர்டோகன் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி அங்கு நடைபெற உள்ள அதிபர் தேர்தலில் போட்டியிட ஆயத்தமாகி வருகின்றார். ஏற்கனவே இவர் தனது விதிமுறைகளால் மதச் சார்பற்ற துருக்கியை இஸ்லாமிய நெறிமுறைகளுக்கு உட்படுத்துகின்றார் என்ற எண்ணம் காணப்படுகின்றது. இந்த நிலையில் துணைப் பிரதமரின் பெண்களுக்கு எதிரான இந்தக் கருத்துகள் மக்களிடையே அதிகப்படியான எதிர்ப்பைத் தூண்டும் என்ற கருத்தே அங்கு நிலவுகின்றது.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating