வேட்டைக்காரர்களால் ஆபத்து: தென் ஆப்பிரிக்க தேசிய பூங்காவிலிருந்து காண்டாமிருகங்களை வெளியேற்ற திட்டம்!!

Read Time:2 Minute, 28 Second

cd402eaf-ec1b-49c2-818e-446a0f8f3de5_S_secvpfதென்னாப்பிரிக்காவின் வனவிலங்குகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ள க்ருகர் தேசிய வனவிலங்குகள் பூங்காவில் காண்டாமிருகங்கள் தொடர்ந்து வேட்டையாடப்பட்டு வருகின்றன. ஆசியாவின் சில பகுதிகளில் செயல்பட்டுவரும் சட்ட விரோத சந்தைகளில் காண்டாமிருகத்தின் கொம்புகள் அதிக மதிப்பைப் பெற்றுள்ளன. அதுமட்டுமின்றி சீனர்களும், வியட்நாமியர்களும் காண்டாமிருகக் கொம்புகளைத் தங்கள் வீடுகளில் வைத்திருப்பதை கௌரவமாகக் கருதுகின்றனர். மேலும் சில குணமளிக்கும் மருத்துவ சிகிச்சை முறைகளிலும் இந்தக் கொம்புகள் பயன்படுத்தப்படுவதால் இதன் தேவை அதிகரித்து வருவதாகக் கூறப்படுகின்றது.

இதனால் இந்த வருடம் மட்டுமே தென்னாப்பிரிக்காவில் மட்டுமே 560 காண்டாமிருகங்கள் கொல்லப்பட்டுள்ளதாக இங்குள்ள தேசிய பூங்காக்களின் கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. இவற்றுள் பாதிக்குமேல் க்ருகர் பூங்காவில்தான் கொல்லப்பட்டுள்ளன. இந்த நடவடிக்கையைத் தடுத்து கண்டாமிருகங்களைப் பாதுகாப்பதற்காக அவற்றை அங்கிருந்து வெளியேற்ற பூங்கா அதிகாரிகள் திட்டமிட்டு வருவதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆயினும் இது குறித்த தீர்மானம் இன்னும் எட்டப்படவில்லை என்று பூங்காவின் தகவல் தொடர்பாளர் வில்லியம் மபாசா இன்று கூறியுள்ளார். மேலும் அருகில் உள்ள மொசாம்பியாவிலிருந்து வரும் வேட்டைக்காரர்களின் தாக்குதலுக்கு க்ரூகர் தேசியப் பூங்காவே இலக்காவதால் இத்தகைய தாக்குதல்களை மற்ற இடங்களுக்குத் திசை திருப்பவே இந்த ஏற்பாடு செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post இணையத்தில் 7 லட்சம் பேர் பார்த்து ரசித்த வீடியோ எது தெரியுமா?
Next post ஆப்கானிஸ்தானில் 10 வயது சிறுமி கற்பழிப்பு: கருணை கொலைக்கு மிரட்டல்!!