பல கொடுமைகளை அம்பலப்படுத்திய பாடகியின் மரணம்!!
30 மில்லியன் மக்கள்தொகை கொண்ட பழமைவாத சமூகம் நிரம்பிய பெரு நாட்டில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் குறித்து பொதுவாக விமர்சனங்கள் எழுவதில்லை.
பெண்களுக்கு நடக்கும் பாலியல் துன்புறுத்தல்களோ, உள்நாட்டு வன்முறைகளோ தனியார் விஷயங்களாகக் கருதப்படுவதால் பொலிஸிலும் பெரிதாகப் புகார்கள் பதிவாவது இல்லை.
ஆனால் கடந்த மார்ச் மாதம் மூளையில் இரத்தக்கசிவு என்று அந்நாட்டின் பிரபல தொலைக்காட்சி பாடகி எடிடா குரேரோ (வயது 30) மருத்துவமனையில் இறந்தபோது அவரது கணவர் பால் ஒலோர்டிகா அவரை அடித்தே கொன்றுவிட்டார் என்ற தகவல் வெளிவந்தது.
பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ள அவர் தற்போது ஒரே இடத்தில் இல்லாமல் நகர்ந்து கொண்டேயிருக்கின்றார் என்று பொலிஸ் தகவல்கள் குறிப்பிட்டுள்ளன.
இதற்கிடையே கடந்த மே மாதம் தலைநகர் லிமாவில் கூட்டம் நிறைந்த பேருந்து ஒன்றில் சென்றுகொண்டிருந்த நடிகையும், பாடகியுமான மகலி சோலியர் தனக்கு நேர்ந்த பாலியல் துன்புறுத்தல் குறித்து வெளிப்படையாகத் தெரிவித்தார்.
இந்த இரண்டு சம்பவங்களும் அங்கு பெரும் விவாதத்திற்கு உள்ளாயின.
ஆனால் இது போன்ற சம்பவங்களுக்கு தரப்படும் புகார்கள் மிகவும் குறைவு என்பதால் பெரு அரசிடம் இவற்றின் கணக்கீடுகள் மிகவும் குறைவாகவே உள்ளது.
இத்தகைய துன்பங்களினால் 131 பெண்கள் கொலைக்கு உட்படுத்தப்பட்டார்கள் என்றும் அதில் பெரும்பான்மையானோர் 18-லிருந்து 34 வயதுக்குட்பட்டவர்கள் என்று பெண்கள் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பெண்கள் தங்களுக்கு நேரும் கொடுமைகளை அமைதியாக ஏற்றுக்கொள்ளாமல் பொலிஸாரிடம் புகார் அளிக்கவேண்டும் என்று மனுவெலா ரமோஸ் என்ற பெண்கள் உரிமைக் குழுவின் தலைவியான மிலேனா ஜஸ்டோ தெரிவித்தார்.
பெண்கள் நலத்துறை அமைச்சரான கர்மென் ஒமோண்டே அங்கு பிரபலமாக விளங்கும் தேசிய பெண்கள் கைப்பந்து அணியின் பயிற்சியாளர் நடாலியா மலகாவுடன் இணைந்து பெண்கள் தங்கள் உரிமைகளுக்காக முன்நிற்கும் வண்ணம் ஒரு ஊக்குவிப்பு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
இந்த மாத ஆரம்பத்தில் இத்திட்டம் தொடங்கப்பட்டபோது பெண்கள் தங்களுக்கான மரியாதையைப் பெறவும், பேசவும் முன்வர வேண்டும் என்று மலகா குறிப்பிட்டார்.
More Stories
மன இறுக்கம் குறைக்கும் கலை! (அவ்வப்போது கிளாமர்)
உனது ஆடையையும்எனது ஆடையையும்அருகருகே காய வைத்திருக்கிறாயேஇரண்டும்காய்வதை விட்டுவிட்டுவிளையாடிக் கொண்டிருப்பதைப் பார்! – தபூ சங்கர் கோபியும் சந்தியாவும் புதிதாகத் திருமணம் செய்து கொண்டவர்கள். பன்னாட்டு நிறுவனங்களில் பணிபுரிபவர்கள்....
நீ பாதி நான் பாதி!! (அவ்வப்போது கிளாமர்)
முடியாத தவம்என்னைக் குத்திக் கிளறும்வன்மம் மிகுந்த உன் அழகைஎப்படியடி பொறுத்துக் கொள்வேன்இரு கண்களையும்இறுக மூடி… – நா.வே.அருள் செந்தில்நாதன் பிசினஸ்மேன். அவருக்கு கல்லூரியில் படிக்கும் மகனும் மகளும்...
செக்ஸ் வேண்டாம்… செல்போனே போதும்!! (அவ்வப்போது கிளாமர்)
இன்று மொபைல் போன் மோகம் வயது வித்தியாசமில்லாமல் அனைவரையும் ஆட்டி வைக்கிறது என்பது நாம் அறிந்த ஒன்றுதான். ஒரு நிமிடம் கூட கையில் மொபைல் இல்லாமல் பெரும்பாலானோரால்...
பாலியல் உறவாலும் டெங்கு பரவும்?! (அவ்வப்போது கிளாமர்)
முறையற்ற பாலியல் உறவால் எய்ட்ஸ் போன்ற நோய்கள் பரவும் என்பதைக் கேள்விப்பட்டிருப்போம். தற்போது டெங்கு காய்ச்சலும் பரவும் என்பதை ஸ்பெயின் நாட்டு ஆய்வாளர்கள் உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். டெங்கு காய்ச்சலை...
போர்னோகிராபியை பற்றி பெண்கள் என்ன நினைக்கிறார்கள்?! (அவ்வப்போது கிளாமர்)
ஆண்கள் காட்சித்தூண்டுதலுக்கு ஆட்படுகிறவர்கள். அதனால்தான் ஒரு பெண்ணைப் பார்த்த உடனே காதலில் விழுகிறார்கள். ஆனால், பெண்கள் அப்படி காட்சித்தூண்டலுக்கு ஆட்படுகிறவர்கள் அல்ல. அதன் பின்னிருக்கும் காரண, காரியங்களை...
காதலிக்க நேரமில்லை!! (அவ்வப்போது கிளாமர்)
திருமணத்தின் மிக முக்கிய அம்சமான தாம்பத்ய உறவு என்ற ஒன்றே இல்லாமல் பெரும்பாலான தம்பதிகள் வாழ்ந்து வருவதாகக் கூறி கலவரப்படுத்துகிறது சமீபத்திய புதிய மருத்துவ ஆய்வறிக்கைகள். இதற்கு...
Average Rating