நடிகை ரோஜாவை முற்றுகையிட்டு ரகளை!!

Read Time:2 Minute, 45 Second

1882441109rojaஆந்திர மாநிலம் நகரி நகராட்சியை ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கைப்பற்றியது. இதன் தலைவராக சாந்த குமார் உள்ளார்.

நகராட்சி மன்ற கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் தொகுதி எம்.எல்.ஏ. நடிகை ரோஜா கலந்து கொண்டார். தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த சித்தூர் எம்.பி. சிவபிரசாத் வரவில்லை. அவர் வர முடியாததால் மன்ற கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்று தெலுங்கு தேச கவுன்சிலர்கள் வற்புறுத்தினார்கள்.

ஆனால் இதனை நடிகை ரோஜா ஏற்கவில்லை. கூட்டத்தை ஒத்திவைக்க வேண்டும் என்றால் 24 மணி நேரத்துக்கு முன்னதாகவே தெரிவிக்க வேண்டும். திடீர் என சொன்னால் தள்ளி வைக்க முடியாது’’ என்று அவர் கூறினார்.

இதையடுத்து கூட்டம் தொடங்கியது. நகரசபை தலைவர் சாந்தகுமார் அவை நிகழ்ச்சி குறிப்புகளை படிக்க தொடங்கினார்.

உடனே தெலுங்கு தேச கவுன்சிலர்கள் நகரசபை கமிஷனரை முற்றுகையிட்டு ரகளை செய்தனர். எங்கள் எம்.பி. இல்லாமல் கூட்டம் நடத்தக் கூடாது என்றனர். இதனால் கமிஷனர் கூட்டத்தில் இருந்து வெளியேறினார். அதன் பின்பும் கூட்டம் தொடர்ந்து நடந்தது.

உடனே தெலுங்கு தேச தொண்டர்கள் கட்சி மாறி ஓட்டளித்த எங்கள் கவுன்சிலரை வெளியேற வேண்டும் என்று கோரி அவரை தாக்க முயன்றனர்.

அவர்களுடன் நடிகை ரோஜா கடுமையான வாக்குவாதம் செய்தார். உடனே தெலுங்கு தேசம் தொண்டர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். சுமார் 2 மணி நேரம் இந்த முற்றுகை நடந்தது. இதனால் ரோஜா வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. தகவல் கிடைத்ததும் போலீசார் அங்கு வந்தனர். அவர்கள் நடிகை ரோஜாவையும், கவுன்சிலர் அரிகரனையும் பத்திரமாக மீட்டு ஒரே காரில் அனுப்பிவைத்தனர்.

அதன்பின் கவுன்சிலர்கள் நகர சபை அலுவலகத்துக்குள் புகுந்து நாற்காலிகளை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் நகரியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post எந்த நேரத்தில் புகைக்கலாம்!!
Next post நடிகைக்கு பல கோடி ரூபாயில் வீடு வாங்கி தந்த நடிகர்!!