யாழ்.: தம்பிக்கு மாம்பழத்தை கொடுத்து விட்டு, 13 வயதுச் சிறுமி மீது பாலியல் துஷ்பிரயோகம்..

Read Time:2 Minute, 0 Second

rape.child-abuseதம்பிக்கு மாம்பழத்தைக் கொடுத்து ஏமாற்றி விட்டு சகோதரியான 13 வயதுச்சிறுமியை கத்தியைக் காட்டி அச்சுறுத்தி பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய 25 வயதான இளைஞர் ஒருவரை நெல்லியடிப்பொலிஸார் நேற்று இரவு கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நபர் தற்போது பொலிஸ் காவலில் வைக்கப்பட்டுள்ள அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமி யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த பாலியல் துஷ்பிரயோகச் சம்பவம் யாழ்.கரவெட்டி ராஜகிராமம் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டுக்கு 300 மீற்றர் தூரத்திலுள்ள கிணற்றில் குடிநீர் எடுப்பதற்காக தம்பியுடன் குறித்த சிறுமி சென்றுள்ளாள்.

இந்நிலையில் அவ்வழியால் வந்த இளைஞன் சிறுமியின் தம்பியாருக்கு மாம்பழம் ஒன்றைக் கொடுத்து ஏமாற்றி அவ்விடத்தை விட்டு அகற்றி விட்டு சிறுமியை கத்தியைக் காட்டி அச்சுறுத்திய அதேவேளை அருகிலிருந்த பற்றைப்பகுதிக்குள் கொண்டு சென்று பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்டுள்ளார்.

இதனையடுத்து குறித்த சிறுமி தனக்கு நடந்த துன்பத்தை பெற்றோர்களிடம் எடுத்துக்கூறவே அவர்களினால் பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டதை அடுத்து சந்தேக நபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post சிறுமியை காதலித்து, கர்ப்பிணியாக்கி விட்டு தப்பி ஓடிய இளைஞர்..
Next post டக்ளஸ்,கருணா, பிள்ளையான் ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தப்படும் -ஜனாதிபதி ஆணைக்குழு