4வது முறையாக உலக கோப்பையை வென்றது ஜெர்மனி!

Read Time:2 Minute, 7 Second

003uஉலகக்கோப்பை கால்பந்து இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவை வீழ்த்தி கோப்பையை 4 வது முறையாக வென்றது ஜெர்மனி.

உலகக் கோப்பை கால்பந்து தொடரின் இறுதிப்போட்டி பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவிலுள்ள மரகானா ஸ்டேடியத்தில் நேற்று நடைபெற்றது. இதில் அர்ஜெர்டினா மற்றும் ஜெர்மனி அணிகள் மோதின.

ககைய-றழசடன-உரி-2014-கiயெட-பநசஅயலெ-றiளெ-கழரசவா-உhயஅpழைளொip

ஆட்டத்தின் முதல் பாதியின் முடிவில் இரு அணிகளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் தாக்குதல் ஆட்டத்தை வேகப்படுத்திய ஜெர்மனி, அர்ஜென்டினாவுக்கு நெருக்கடி கொடுத்தது.

இதனால் 90 நிமிட முடிவிலும் இரு அணியும் கோல் அடிக்காததால் ஆட்ட நடுவர் கூடுதல் நேரம் வழங்கினார்.

முதல் பாதி கூடுதல் நேரத்திலும் அர்ஜென்டினா – ஜெர்மனி அணிகள் கோல் ஏதும் அடிக்காமல் சமநிலையில் இருந்தன. இதனையடுத்து இரண்டாம் கூடுதல் நேரம் ஒதுக்கப்பட்டது.

ஆட்ட முடிவுக்கு 8 நிமிடங்களே எஞ்சியிருந்த நிலையில், 113-வது நிமிடத்தில் ஜெர்மனியின் மரியோ கோட்சே ஒரு கோல் அடித்தார். இதன்மூலம் அர்ஜெண்டினாவை 1-0 என்ற கோல்கணக்கில் வென்று 4-வது முறையாக உலகக்கோப்பையை கைப்பற்றியது ஜெர்மனி.

இதன் மூலம் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் ஜெர்மனி 4 வது முறையாக கோப்பையை வென்றுள்ளது. இதில் 3 முறை இறுதிப் போட்டியில் அர்ஜென்டினாவுடன் மோதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post விஜய்யின் நன்றியை மறந்த த்ரிஷா!
Next post எந்தப் பெண்ணிடமும் இல்லாத ஒன்று.. இவருக்கு விந்தனு என்றாலே அலர்ஜி!