ஹேட்டலில் வரிசையை மீறிய ஒபாமா!!

Read Time:2 Minute, 22 Second

1550918051obamaஅமெரிக்க ஜனாதிபதி ஒபாமா, ஹோட்டல் ஒன்றில், சிறிது நேரம் வரிசையில் நின்றிருந்தார். பிறகு அவராகவே வரிசையை விட்டு விலகி, முன்னேறிச் சென்று, உணவுப் பண்டங்களை வாங்கினார்.

இதற்காக மன்னிப்பு கேட்ட அவர், தன் முன் நின்று கொண்டிருந்த இருவருக்கும் சேர்த்து பணத்தைக் கொடுத்தார்.

அமெரிக்காவில் மக்கள் கூடும் இடங்களில், வரிசை முறை கண்டிப்புடன் பின்பற்றப்படுகிறது. ஜனாதிபதியாக இருந்தாலும், வரிசையில் நின்று தான், பொருட்களை வாங்க வேண்டும்.

அந்நாட்டின் ஆஸ்டின் நகரில் நேற்று நடைபெற்ற, தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் பங்கேற்ற, ஜனாதிபதி ஒபாமா, அங்கிருந்து தன் இருப்பிடம் செல்வதற்கு முன், ஆஸ்டின் நகரின் பிரபலமான ஹோட்டல், ´ஆரோன் பிராங்க்ளின்´ சென்றார்.

அங்கு விற்கப்படும், சுட்ட கறி மிகவும் ருசியாக இருக்கும் என்பதை அறிந்திருந்த ஒபாமா தன் மகளுடன் வரிசையில் நின்றிருந்தார்.

வரிசை மெதுவாக நகர்ந்து கொண்டிருந்தது; ஒபாமாவுக்கு முன்னால் இருவர் நின்று கொண்டிருந்தனர். என்ன நினைத்தாரோ தெரியவில்லை, ´´சாரி… எனக்கு வேலை இருக்கிறது; மன்னித்து விடுங்கள் நண்பர்களே…´´ என, கூறியபடி, வரிசையை விட்டு விலகி, இருவரை தாண்டிச் சென்று, உணவுப் பொருட்களை ஆர்டர் செய்தார். அவருக்கும், அவர் மகள் மற்றும் ஹெலிகாப்டர் பைலட், உதவியாளர்கள் என பலருக்கும், 3.5 கிலோ இறைச்சி

உணவுகள் மற்றும் பிற உணவுகளை பார்சல் கட்டி வாங்கி, ஹெலிகாப்டரில் ஏறிவிட்டார். முன்னதாக, அவர் முன் நின்றிருந்த இருவரின் பில் தொகையையும், ஒபாமாவே கொடுத்தார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Previous post மட்டக்குளியில் ஒருவர் அடித்துக் கொலை: பெண் சுட்டுக் கொலை!!
Next post சிம்புவின் இது நம்ம ஆளு படத்தில் ஹன்சிகாவின் காதல் கதையும் ஓடுகிறதாம்!!!